என் மலர்

  நீங்கள் தேடியது "Ajay Devgan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவரை வரவேற்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #KeerthySuresh #Jhanvi
  தமிழ்த் திரையுலகில் இருந்து பல கதாநாயகிகள் இந்தி சினிமாவுக்கு சென்று முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்துள்ளனர். தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார். 

  ஜான்வி கபூரின் தாயாரும் மறைந்த நடிகையுமான ஸ்ரீதேவியும் தமிழ்த் திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று தடம் பதித்தவர். அந்த வரிசையில் கீர்த்தி சுரேசும் இணைந்து இருக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரரும் பயிற்சியாளருமான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் அஜய் தேவ்கன் சையத் கதாபாத்திரத்தில் நடிக்க அவரது மனைவி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். அமீத் ‌ஷர்மா இயக்கும் இந்தப் படத்தை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார்.  இந்நிலையில் கீர்த்தி படக்குழுவில் இணைந்தது குறித்து ஜான்வி, “மகாநடி திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து உங்கள் மீது அளவு கடந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அப்பாவின் அடுத்த படத்தில் நீங்கள் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது. நல்வரவு” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Rajamouli #RRR
  ‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. முதல்கட்டப் படப்பிடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார். சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை டி.வி.வி. தான்யா தயாரித்து வருகிறார்.

  தற்போது ராம்சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கவுரவ கதாபாத்திரத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க மறுத்த அஜய் தேவ்கன், ராஜமவுலி இயக்கும் படத்தை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.  கவுரவ கதாபாத்திரம் தான் என்பதால் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளதாக அஜய் தேவ்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நான் ஈ’ இந்தி பதிப்புக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன். அந்த படத்திலிருந்தே ராஜமவுலி, அஜய் தேவ்கன் இருவரும் நட்பாகப் பழகி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ‘காதல் தேசம்’ படம் மூலம் புகழ் பெற்றவருமான தபு, தான் திருமணம் செய்யாததற்கு பிரபல நடிகர் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். #Tabu
  இந்தியில் பிரபல நடிகையான தபு தமிழில் சிறைச்சாலை, காதல் தேசம், இருவர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 1980இல் இருந்து நடித்துவரும் தபுவுக்கு 46 வயது ஆகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ள வில்லை.

  அதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். “நான் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். திருமணம் செய்து கொண்டு வாழ்வது சிறப்பானதா? தனியாக இருப்பது நல்லதா? என்று கேட்கிறார்கள்.

  எனக்கு ஒரு பகுதி மட்டுமே தெரியும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. இன்னொரு பகுதி தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் பதில் சொல்ல முடியும். எனக்கு அந்த அனுபவம் இருந்தால் திருமணம் சிறந்ததா? திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா? என்பதைச் சொல்லியிருப்பேன்” என்றார்.  மேலும் தனக்கு திருமணம் ஆகாததற்குக் காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என கூறி இருக்கிறார் “நானும், அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார்.

  என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார். அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை” என அவர் தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜய் தேவ்கன் 1999ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  ×