என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்"
- அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது
- நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும்
ஜனவரி 29, 2026 அன்று, தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் நடிகர்கள் தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, சாய் பல்லவி உள்ளிட்டோர் பல்வேறு பிரிவுகளில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இசை, இயக்கம் என அனைத்துப் பிரிவுகளிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் இந்த விருது தேர்வுகள் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. பல நல்லப் படங்களுக்கு விருது வழங்கப்படாமல், அரசிற்கு ஆதரவளிப்போருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
இயக்குநரும், நடிகருமான சேரனும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள சேரன்,
"பெண்களுக்கு இலவச பஸ்.. வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை.. திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு .. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த "திருமணம்" திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது..
அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது.. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. அரசுகள் மாறலாம்.. அரசின் நிலைப்பாடு என்றும் பாராபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






