என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகரம்"

    • அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கமல் ஹாசன் பங்கேற்றார்.

    நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

    இந்நிலையில் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா முடிந்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா - ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    • அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசன் எம்.பி. பங்கேற்றார்.

    நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

    • நடிகர் சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
    • நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு.

    நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

    அப்போது, சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.

    பின்னர், நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    டீஸர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் எனக்கு இதில் கிடைக்கிறது.

    சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்.

    நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அதனாலதான் இது(டிஷ்யூ பேப்பர்) கொண்டு வந்தேன். பரவால நான் நல்ல நடிகன்தான் அழாம பேசிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வரும் நிலையில், தற்போது பள்ளி கழிப்பறைகளை புதுப்பிக்க இருக்கிறார். #Suriya
    நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை ஆதரவற்ற குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கல்விக்கு உதவி செய்து வருகிறது.

    நேற்று சூர்யாவுக்கு 44-வது பிறந்தநாள். இதையொட்டி மாவட்டத்துக்கு 10 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை புதுப்பிக்க முடிவு செய்துள்ளனர்.

    விரைவில் இப்பணி தொடங்க உள்ளன. இதை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகளை புதுப்பிப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

    சூர்யாவின் ரசிகர் மன்றங்கள் 40 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 40 மாவட்ட ரசிகர் மன்றங்களுக்கும் தலா 10 அரசுப்பள்ளிகள் குறிப்பாக பெண்கள் பள்ளிகளாக பார்த்து ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள்.



    இந்த நிலையில் சூர்யா தயாரித்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா இன்று வடபழனியில் நடந்தது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதை விவசாயிகளை மையமாக கொண்டது என்பதால் விவசாய சங்க பிரதிநிதிகளும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

    விழாவில் விவசாயிகளுக்கு தனது அகரம் பவுண்டேசன் சார்பில் நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார். விவசாயம் மற்றும் விவசாய மேம்பாடு, ஆராய்ச்சிக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சூர்யா குறிப்பிட்டார்.
    ×