என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அகரம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார் இயக்குநர் ஞானவேல்
    X

    அகரம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார் இயக்குநர் ஞானவேல்

    • அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசன் எம்.பி. பங்கேற்றார்.

    நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.

    Next Story
    ×