search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Simran"

    • இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் சப்தம்.
    • சமீபத்தில் இப்படத்தில் லைலா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

     

    லைலா - சப்தம்

    லைலா - சப்தம்

    சமீபத்தில் ஈரம் படத்தின் கூட்டணியான இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சப்தம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்பு நடிகை லைலா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    சிம்ரன் - சப்தம்
    சிம்ரன் - சப்தம்

    இந்நிலையில் சப்தம் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு நடிகர் ஆதி அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தொடர்சியாக நடிகைகள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    பேட்ட படத்தை தொடர்ந்து சனந்த் ராகிருஷ்ணன் இயக்கும் ஆக்‌‌ஷன் சாகச படத்தில் சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. #Simran #Trisha #SimTrishsNxT
    பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். தற்போது படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்த படத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்‌‌ஷன் கலந்த சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கொரில்லா படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்க உள்ளார்.


    சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. #Simran #Trisha #SananthRadhaKrishnan #SimTrishsNxT

    பேட்ட படத்தை தொடர்ந்து சனந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் ஆக்‌‌ஷன் சாகச படத்தில் சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Simran #Trisha
    ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. 1999-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் திரிஷா நடித்தது மிகவும் சின்ன வேடம். ஆனால் அதன் பின் கதாநாயகியாக அறிமுகமாகி 16 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கிய சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். பின்னர் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.

    ‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்தபடத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்‌‌ஷன் சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. #Simran #Trisha #Sananth

    திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது ரவுண்டில் பல படங்களில் நடித்து வரும் சிம்ரன், தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். #Simran
    இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார்.

    நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.



    இந்தப் படத்தை அவருடன் இணைந்து ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பாலசந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம், மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் மாதவனும் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தப் படத்தில் மீண்டும் இணைய உள்ளனர்.
    ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பார்த்து பாராட்டியுள்ளார். #Petta #Rajini #MaheshBabu #Rajinikanth
    ரஜினி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.



    இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பேட்ட ரஜினி ரசிகர்களுக்கான படம். அந்த ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரே ஒரு வார்த்தைதான் தலைவா. கார்த்திக் சுப்புராஜ் சிறந்த திறமையான இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம் போல் சிறப்பாக பணியாற்றியுள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    பேட்ட படத்தில் என்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் பேட்டியளித்துள்ளார். #Rajinikanth #Rajini #Petta
    ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக பலரும் கூறி வருகிறார்கள். 

    இந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ‘பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்’ என்றார்.



    நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார். மூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு இன்று சென்னை திரும்பியுள்ளார். #Rajini #Petta 
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - சிம்ரன் - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தின் விமர்சனம். #Petta #PettaParaak #Rajinikanth #Rajinified
    ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியையே மிரள வைக்கிறார். 

    இவ்வாறாக பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணுகிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றுகிறார்.



    இவ்வாறாக தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணியில் என்ன? நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சூப்பர் ஸ்டார் என்பது வெறும் வார்த்தை இல்லை என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் ரஜினி. பயமறியா சிங்கமாக, படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்து ரசிக்க வைத்துச் செல்கிறார். பழைய ரஜினியை பார்க்க ஆசைப்படுவோருக்கு இந்த படம் ஒரு மெகா விருந்து என்று தான் சொல்ல வேண்டும். கிராமத்து கெட்-அப், இளமையான தோற்றம் என மாஸ் காட்டிச் செல்கிறார்.



    நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனாக சசிகுமார் மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரன், திரிஷா ரஜினி ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் கொஞ்சும் பேச்சில் ரசிகர்களின் இதங்களை கொள்ளை அடிக்கிறார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம். படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

    கல்லூரியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் காட்சி, ரஜினியிடம் அடங்கும் காட்சி என பாபி சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ் அழகாக வந்து செல்கிறார். கதையின் ஓட்டத்திற்கு சனத் ரெட்டி முக்கிய காரணமாக வருகிறார். முனிஸ்காந்த், நரேன், ராமசந்திரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களுமே கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.



    தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை கார்த்திக் சுப்புராஜ் அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார். ரசிகர்கள் ரஜினியை எப்படி எல்லாம் பார்க்க எண்ணினார்களோ அப்படியே திரையில் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராஜூக்கு பாராட்டுக்கள். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கார்த்திக் சுப்புராஜ் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார். ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். சிறப்பான முயற்சி.



    அனிருத் இசையில் பாடல்கள் வேற லெவல். பின்னணி இசையின் மூலம் ரஜினியிசத்தை உணர வைக்கிறார். திருவின் ஒளிப்பதிவு அபாரம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் `பேட்ட' சூப்பர்ஸ்டார் படம். #Petta #PettaReview #Rajinikanth #PettaFromToday #PettaParaak #Rajinified #PettaFDFS #Simran #Trisha #Sasikumar #VijaySethupathi #NawazuddinSiddiqui

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் நாளை திரைக்கு வரும் நிலையில், மலேசியாவிலும் பேட்ட படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’ படம் நாளை வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன், இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடுகிறது. 

    சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் ரசிகர்களை கவர்ந்தது.

    மலேசியாவில் பல கார்கள், பேருந்துகளில் பேட்ட படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. மலேசியாவில் இதுவரைக்கும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்திற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. 



    பேட்ட அங்கு 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

    மலேசியாவில் 140 திரையரங்குகளில் பேட்ட திரைப்படம் வெளியாக உள்ளது. #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘பேட்ட’ படம் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என நம்புவதாக கார்த்திக் சுப்புராஜ் கூறினார். #Petta #Rajinikanth
    ரஜினியின் ‘பேட்ட’ படம் ஜனவரி 10-ந் தேதி வெளியீட்டுக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரப்படுத்துவது என படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது. தெலுங்கிலும் ஜனவரி 10-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதையடுத்து அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.

    அப்போது ‘பேட்ட’ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது:- ‘பேட்ட’ எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குழுவுக்குமே ஒரு கனவுப் படம். ஏனென்றால் நாங்கள் அனைவருமே சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள். தலைவரின் ரசிகர்கள், மற்றவர்கள் என அனைவருக்கும் இந்தப் படம் ஒரு விருந்தாக இருக்கும். குடும்பப் பின்னணியில் வலுவான கதை இருக்கும் படம் பேட்ட.



    தலைவர் பாணியில் நிறைய ஆக்‌‌ஷன், படத்தில் இருக்கிறது. இது பண்டிக்கைக்கான படம். இந்தப் படத்தையும் பண்டிகை போல கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன். சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாவது இன்னும் அந்த மனநிலையை உற்சாகமாக்கும்.

    அதே நாளில் இன்னும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் (வினய விதேய ராமா மற்றும் என் டி ஆர் பயோபிக்) வெளியாவது கடுமையான போட்டி என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ரசிகர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை நம்புபவன் நான். அதனால், பேட்ட அதற்கான ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர்கள் இதயங்களை வெல்லும் என நான் நம்புகிறேன்’ இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth

    பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள சிம்ரன், பேட்ட படம் தனது சினிமா வாழ்க்கையை மீட்டு கொடுத்துவிட்டது என்று கூறினார். #Petta #Rajinikanth #Simran
    பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இன்னும் இளைமையாகவும், உற்சாகமாகவும் இருக்கிறார் சிம்ரன். அவர் அளித்துள்ள பேட்டி விவரம்:-

    கேள்வி:- பேட்ட படத்தில் உங்கள் தோற்றத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதே?

    பதில்:- இது எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. கடுமையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா மூலம் என்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்துள்ளேன். ஒருவேளை ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் பெறுவதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    கே:- நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த நீங்கள் திடீர் என்று ரஜினி படத்தில் நடிப்பது பற்றி?

    ப:- பேட்ட படம் என்னுடைய பாதையை மீட்டு கொடுத்துள்ளது. என்னுடைய சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். இந்த படத்துக்கு பின்னர் நான் நடிக்கும் படங்களை பொறுப்புடன் தேர்ந்தெடுக்க வேண்டியதாகி உள்ளது.

    கே:- ரஜினியுடன் நடித்த முதல் நாள் அனுபவம்?

    ப:- நான் ரஜினியின் தீவிர விசிறி, அவரை போல நடக்கவும் கண்ணாடியை ஸ்டைலாக அணியவும் பலமுறை முயன்று இருக்கிறேன். முதல் நாள் நடித்தபோது பதட்டமாகி என் வசனத்தையே மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அமைதியாக்கி சகஜமாக பேசினார். நாம் எல்லோருமே ரசிகர்களை மகிழ்விக்க தான் நடிக்கிறோம் என்று கூறி என்னை ஆசுவாசப்படுத்தினார்.

    கே:- சந்திரமுகி படத்தில் நடிக்க வேண்டியது நின்று போனதில் வருத்தம் உண்டா?

    ப:- ஆமாம். அந்த படத்தை இழந்ததில் எனக்கு நிறைய வருத்தம் உண்டு. ஆனால் ஒரு அழகான காரணத்தால் தான் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் 4-வது நாள் நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எனவே தான் நடிக்க முடியாமல் போனது.



    கே:- கர்ப்பமானதால் ஒரு படத்தை இழந்தபோது ஒரு பெண்ணாக சினிமாவில் இருப்பதன் சிரமத்தை உணர்ந்தீர்களா?

    ப:- இல்லை. நான் எப்போதுமே அப்படி நினைத்தது இல்லை. ஒரு பெண்ணாக இருப்பது ஆணாக இருப்பதைவிட உயர்ந்தது. என்னுடன் தொடக்க காலத்தில் நடித்த விஜய் இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதில் எனக்கு மகிழ்ச்சியே. அதே நேரத்தில் அவர் வீட்டில் ஒரு தந்தையாக இருக்கிறார். அதேபோல் தான் சினிமா எனக்கு தொழில். வீட்டில் மனைவி. இரண்டையும் சமமாக பார்க்கிறேன்.

    கே:- 1990-களில் நீங்களும் ஜோதிகாவும் தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தீர்கள். அந்த நினைவுகள் வருமா?

    ப:- அந்த நாட்களை நினைத்து பார்த்தால் சந்தோ‌ஷமாக இருக்கும். இன்னமும் ரசிகர்கள் மனதில் எனக்கு தனி இடம் இருப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

    கே:- சினிமாவுக்கு நிகராக டிவி, இணைய தொடர்கள் வந்துவிட்டதே?

    ப:- பெண்கள் தொடர்பான படங்களுக்கு நிறைய தளங்கள் உருவாகிவிட்டன. நான் இதுபோன்ற தளங்களையும் கவனித்து வருகிறேன். எனக்கும் பெண்களை மையப்படுத்திய படங்களில் தொடர்களில் நடிக்க ஆசை தான்.

    ஆனால் பேட்ட, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடிப்பது எளிது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்தால் எல்லா சுமையையும் நம் தோளில் தான் விழும். நமது முழு கவனத்தையும் அந்த படைப்புக்கு தரவேண்டி இருக்கும்.



    கே:- நீங்கள் நடித்த பழைய படங்களை பார்க்கும் போது என்ன தோன்றும்?

    ப:- அப்போது நான் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தேன். ஒருநாளில் பெரும்பாலான நேரம் படப்பிடிப்பு தளங்களிலேயே போகும். பண்டிகையோ விடுமுறை நாட்களோ எனக்கு கிடையாது. அதுபோல இன்று நடிக்க சொன்னால் நான் மறுத்து விடுவேன். எனக்கு குழந்தைகள் மிக முக்கியம்.

    கே:- உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான 3 படங்களை சொல்ல முடியுமா?

    ப:- வாலி, பிரியமானவளே, கன்னத்தில் முத்தமிட்டால். யூத் படத்தில் நான் ஆடிய ஆல்தோட்ட பூபதி பாடல். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.

    இவ்வாறு அவர் கூறினார். #Petta #Rajinikanth #Simran

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சென்னையில் பேட்ட படத்திற்கு அதிக திரைகளும், மற்ற ஊர்களில் விஸ்வாசம் படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினிக்கு தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் படத்தை மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பேட்ட படத்திற்கு திரையரங்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர். வாழ்க்கைப்படம், ராம்சரணின் வினய விதய ராமா, வெங்கடேஷ், வருண் தேஜா நடிப்பில் எஃப் 2 உள்ளிட்ட படங்கள் சங்ராந்திக்கு ரிலீசாக இருப்பதால் இந்த மூன்று படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் பேட்ட படத்திற்கு திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    எனவே பேட்ட படத்தின் தெலுங்கு பதிப்பை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. எனினும் பாலிவுட்டில் பேட்ட 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #PettaPongalParaak #PettaPongal2019 #Petta #Rajinikanth

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்தின் டிரைலரை 24 மணிநேரத்தில் 1 கோடி பேர் பார்த்துள்ளனர். #PettaTrailer #PettatrailerHits10MViews #Rajinikanth
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் `பேட்ட'. ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியானது. படத்தில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் ஸ்டைலாகவும், அதிரடியாகவும் தோன்றுவதால் பேட்ட டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பேட்ட டிரைலர் ரிலீசான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

    12 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் பார்த்தனர். இதுதவிர 5 லட்சத்து 56 ஆயிரம் பேர் டிரைலரை லைக் செய்துள்ளனர். இன்று காலை 24 மணிநேரம் கடந்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. நேற்று டுவிட்டரில் உலக அளவில் 6-வது இடத்திலும், இந்தியா அளவில் முதல் இடத்திலும் டிரெண்டாகியுள்ளது. 


    இது தவிர கெட்ரஜினிபைடு, சூப்பர் ஸ்டார்ரஜினி, பேட்ட பொங்கல் பராக் ஆகிய ஹேஷ்டேக்குகளும் இந்தியா அளவில் டிரெண்டாகி உள்ளன. #PettaPongalParaak #PettaPongal2019 #PettaTrailer #PettatrailerHits10MViews #GetRajinified 

    ×