டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 3-வது ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ்

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 3-வது ஸ்னீக் பீக் காட்சி ரிலீஸ்
Published on

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்களின் மத்தியில் வரவேற்பையும் பெற்று வசூல் குவித்து வருகிறது.

அந்த வகையில், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெளியானது முதல் 7 நாள் முடிவில் ரூ.27 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் படத்தின் மூன்றாம் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com