

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் பாராட்டியுள்ளார்.
இதுதொர்பாக இயக்குனர் அபிஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு மற்றும் அவரது வாழ்த்து குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியான அதே நாளில் டூரிஸ்ட் பேமிலி படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
don't know how to explain it… but something inside me healed today. @Suriya_offl sir called my name and said how much he liked #touristfamily ?There's a boy in me still watching v1000 for the 100th time. Today, that boy is crying with gratitude. Thank you sir ? pic.twitter.com/WIbZo5kpUh