search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Jyotika"

  • தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்?
  • தேர்தலில் வாக்களிக்க வராதது ஏன்?

  பிரபல பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமான 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளார். படத்தை துஷார் இயக்கி உள்ளார்.

   இப்படம் அடுத்த மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், ஜோதிகாவிடம் தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிகா, `தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். என்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு கதைக்களம் அமையவில்லை.

  உதாரணத்திற்கு `காதல் தி கோர்' மாதிரி பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் கதை அம்சம் கொண்ட படம் மற்ற மொழி திரைப்படங்களில் உள்ளது. இதுபோன்று தமிழ் திரைப்படங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும். இதுபோல் இல்லாமல் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார்.

  அதைத்தொடர்ந்து நிறைய இடங்களில் சமூக பொறுப்புகள் குறித்து எல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என்று பலரும் கருதுகிறார்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, `நான் எப்போதுமே வாக்களித்துள்ளேன்.

  ஆனால் சிலநேரங்களில் வேலை நிமித்தமாக வெளிநாடுகளிலோ அல்லது வேறு வேலைகளிலோ ஈடுபட்டிருந்தால் மட்டும் வாக்களிக்க இயலாமல் போயிருக்கலாம். இருப்பினும் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் தானே என்று கூறினார்.

  • உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்
  • தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

  நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

  இந்நிலையில் ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் "ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை வினவினார் .

  சில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி நீங்கள் ஐஷுவுக்காக செய்தீர்களோ அதே போல் எனக்கும் உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்" என்ற கமண்ட்டை அப்புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.

  அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கம்மண்டிற்கு "ஊப்ஸ், நாட் அலோவ்டு" என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

  என். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் சில்லுனு ஒரு காதல். {ஐஷூ} என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து இருப்பார். சூர்யா அவரின் கல்லூரி பருவத்தில் பூமிகாவை காதலித்து இருப்பார், ஆனால் அக்காதல் கைக்கூடாமல் போய்விடும். அடுத்து வேண்டா வெறுப்பாக ஜோதிகாவை மணம் முடிப்பார். அடுத்து அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

  இப்படத்தில் தன் பழைய காதலியான பூமிகாவை ஒரு நாள் சந்திப்பதற்கான சூழ்நிலை அமையும் சூர்யாவுக்கு. இதை மையப்படுத்தியே அந்த ரசிகை கமண்ட் செய்து இருக்கிறார்.


  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல்- தி கோர்'.
  • இந்த படத்தை மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது.

  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


  தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


  காதல் தி கோர் போஸ்டர்

  இந்நிலையில், காதல் - தி கோர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மம்முட்டியை கட்டியணைத்தபடி ஜோதிகா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


  • விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
  • இப்படம் தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


  வெங்கட் பிரபு -விஜய்

  இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.


  தளபதி 68

  இதையடுத்து இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


  ஜோதிகா -விஜய்

  விஜய் -ஜோதிகா இணைந்து நடித்த 'குஷி', 'திருமலை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விஜய்யுடன் ஜோதிகா மீண்டும் நடிக்கவுள்ளதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • நடிகர் அஜய் தேவ்கன் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
  • இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

  கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா' என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


  மாதவன் -அஜய் தேவ்கன்

  இதைத்தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன் 'குயின்', 'சூப்பர் 30', 'குட் பை' உட்பட பல படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

  ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


  ஜோதிகா

  நடிகை ஜோதிகா கடைசியாக 1998-ஆம் ஆண்டு வெளியான 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜ்ய தேவ்கன் - மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடந்து வருகிறது.

  நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடந்து வருகிறது.


  கங்குவா படக்குழுவினருடன் சூர்யா -ஜோதிகா

  படப்பிடிப்பிற்கு இடையே தனது மனைவி ஜோதிகா மற்றும் படக்குழுவினருடன் நடிகர் சூர்யா கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசித்தார். தற்போது சுற்றுலா பயணிகள் அதிகமாக கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் அவர்கள் பார்வையில் படாதபடி அதிகாலை நேரங்களில் பிரையண்ட் பார்க் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

  கொடைக்கானலுக்கு வரும் போதெல்லாம் இயற்கை அழகை கண்டு ரசிப்பது புதுவித அனுபவத்தை தருவதாகவும், எத்தனை முறை ரசித்தாலும் கண்களுக்கு சலிப்பை தராத இயற்கை காட்சிகள் இங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

  • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா.
  • இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


  தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அவ்வப்போது உடற்பயிற்சி தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில், தற்போது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஜோதிகா தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தலைக்கீழாக நின்று ஒர்க்கவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போய் 'வாவ்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


  • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது.
  • இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

  சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைப்பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.

  இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்க டேசன் உடன் இருந்தார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

  • மலையாள நடிகர் மம்முட்டி தற்போது 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக இணைந்துள்ளார்.

  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


  காதல் தி கோர்

  தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார்.


  சூர்யா-மம்முட்டி-ஜோதிகா

  இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். இதனை மம்முட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


  • நடிகை ஜோதிகா மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


  காதல் தி கோர்

  தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


  படப்பிடிப்பில் இணைந்த ஜோதிகா

  இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஜோதிகா படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.