என் மலர்
நீங்கள் தேடியது "துஷார்"
- திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.
இதில் இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சுஜய் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார். திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.
தொடக்க ஆட்டக்காரரான இறங்கிய அமித் சாத்விக் 5 ரன்களிலும், டேரில் பெராரியோ ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார்.
வெறும், 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் துஷார் ரஹேஜா ஆட்டமிழந்தார்.
இறுதியாக, பிரதோஷ் ரஞ்சன் பால் 42 ரன்களும், முகமது அலி 25 ரன்களும் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.
இதில், 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 165 ரன்கள் அடித்து திருப்பூர் அணி வெற்றி பெற்றது.
- தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்?
- தேர்தலில் வாக்களிக்க வராதது ஏன்?
பிரபல பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமான 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளார். படத்தை துஷார் இயக்கி உள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், ஜோதிகாவிடம் தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிகா, `தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். என்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு கதைக்களம் அமையவில்லை.
உதாரணத்திற்கு `காதல் தி கோர்' மாதிரி பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் கதை அம்சம் கொண்ட படம் மற்ற மொழி திரைப்படங்களில் உள்ளது. இதுபோன்று தமிழ் திரைப்படங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும். இதுபோல் இல்லாமல் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார்.
அதைத்தொடர்ந்து நிறைய இடங்களில் சமூக பொறுப்புகள் குறித்து எல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என்று பலரும் கருதுகிறார்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, `நான் எப்போதுமே வாக்களித்துள்ளேன்.
ஆனால் சிலநேரங்களில் வேலை நிமித்தமாக வெளிநாடுகளிலோ அல்லது வேறு வேலைகளிலோ ஈடுபட்டிருந்தால் மட்டும் வாக்களிக்க இயலாமல் போயிருக்கலாம். இருப்பினும் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் தானே என்று கூறினார்.






