என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பூர் அணி"
- திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.
இதில் இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சுஜய் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார். திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.
தொடக்க ஆட்டக்காரரான இறங்கிய அமித் சாத்விக் 5 ரன்களிலும், டேரில் பெராரியோ ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார்.
வெறும், 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் துஷார் ரஹேஜா ஆட்டமிழந்தார்.
இறுதியாக, பிரதோஷ் ரஞ்சன் பால் 42 ரன்களும், முகமது அலி 25 ரன்களும் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.
இதில், 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 165 ரன்கள் அடித்து திருப்பூர் அணி வெற்றி பெற்றது.
- பல்லடம், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.
- பரிசு கோப்பை, ரூ.15,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் நண்பர்கள் கால்பந்து குழுவினர் நடத்திய பத்தாம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.
இதில் திருப்பூர் கால்பந்து அணி முதலிடம் பெற்றது. அவர்களுக்கு பரிசு கோப்பை, ரூ.15,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக திருப்பூர் கால்பந்து அணியை சேர்ந்த பன்னீர், சிறந்த கோல் கீப்பராக ஊட்டி அணியைச் சேர்ந்த சேகின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார்,ராம் கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், அறம் அறக்கட்டளை செந்தில்குமார், பரிசுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நடராஜன், கால்பந்து குழு ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி,மற்றும் நிர்வாகிகள் உளப்பட பலர் கலந்து கொண்டனர்.






