என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற திருப்பூர் அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.
பல்லடத்தில் ஐவர் கால்பந்து போட்டியில் திருப்பூர் அணி வெற்றி
- பல்லடம், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.
- பரிசு கோப்பை, ரூ.15,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் நண்பர்கள் கால்பந்து குழுவினர் நடத்திய பத்தாம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்லடம், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.
இதில் திருப்பூர் கால்பந்து அணி முதலிடம் பெற்றது. அவர்களுக்கு பரிசு கோப்பை, ரூ.15,000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக திருப்பூர் கால்பந்து அணியை சேர்ந்த பன்னீர், சிறந்த கோல் கீப்பராக ஊட்டி அணியைச் சேர்ந்த சேகின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார்,ராம் கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், அறம் அறக்கட்டளை செந்தில்குமார், பரிசுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நடராஜன், கால்பந்து குழு ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி,மற்றும் நிர்வாகிகள் உளப்பட பலர் கலந்து கொண்டனர்.