சூர்யாவுடன் ஒருநாள் - ரசிகைக்கு ஜோ-வின் 'சில்' பதில்

உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.
சூர்யாவுடன் ஒருநாள் - ரசிகைக்கு ஜோ-வின் 'சில்' பதில்
Published on

நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

இந்நிலையில் ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் "ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா? என்று ஒரு ரசிகை வினவினார் .

சில்லுனு ஒரு காதல் படத்தில் எப்படி நீங்கள் ஐஷுவுக்காக செய்தீர்களோ அதே போல் எனக்கும் உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் கடன் கொடுங்கள் நான் சூர்யா சார் உடைய மிக பெரிய ஃபேன்" என்ற கமண்ட்டை அப்புகைப்படத்தில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கம்மண்டிற்கு "ஊப்ஸ், நாட் அலோவ்டு" என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

என். கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் சில்லுனு ஒரு காதல். {ஐஷூ} என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து இருப்பார். சூர்யா அவரின் கல்லூரி பருவத்தில் பூமிகாவை காதலித்து இருப்பார், ஆனால் அக்காதல் கைக்கூடாமல் போய்விடும். அடுத்து வேண்டா வெறுப்பாக ஜோதிகாவை மணம் முடிப்பார். அடுத்து அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

இப்படத்தில் தன் பழைய காதலியான பூமிகாவை ஒரு நாள் சந்திப்பதற்கான சூழ்நிலை அமையும் சூர்யாவுக்கு. இதை மையப்படுத்தியே அந்த ரசிகை கமண்ட் செய்து இருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com