'மாநாடு' படத்தை போன்று... SK - VP இணையும் படத்தின் புது அப்டேட்

விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
'மாநாடு' படத்தை போன்று... SK - VP இணையும் படத்தின் புது அப்டேட்
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'பராசக்தி'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 10-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'மாநாடு' படத்தை போல ஒரு வித்தியாசமான கான்செப்டில் உருவாக இருப்பதாகவும் அப்படத்தை விட 10 மடங்கு அதிக திகில் மற்றும் த்ரில்லுடன் இப்படம் இருக்கும் என்று படக்குழுவில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான 'மாநாடு' படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com