என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பத்ம விருதுகள் வென்ற தமிழக கலைஞர்களுக்கு சீமான் வாழ்த்து
    X

    பத்ம விருதுகள் வென்ற தமிழக கலைஞர்களுக்கு சீமான் வாழ்த்து

    • நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
    • மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

    நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்கு நாம் தமிழர் ஒருங்குணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில் சாதித்த திருத்தணி ஓதுவார் ஐயா சுவாமிநாதன், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக்கலையை மீட்டெடுத்த ஓவியக் கலைஞர் ஐயா நீலகிரி கிருஷ்ணன், வெண்கல சிலை வடிப்பதில் சாதித்த சிற்பக் கலைஞர் ஐயா சேலம் காளியப்ப கவுண்டர், இசைத்துறையில் சாதித்த மிருதங்கக் கலைஞர் ஐயா திருவாரூர் பக்தவத்சலம், சிலம்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ள புதுச்சேரி சிலம்ப கலைஞர் ஐயா கே.பழனிவேலு, பொறியாளர் ஐயா காமகோடி, கலைத்துறையில் சாதித்த சகோதரிகள் காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் அவர்களோடு, பத்மபூஷண் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐயா களியப்பட்டி ராமசாமி, ஐயா பழனிசாமி, ஐயா மயிலானந்தன் மற்றும் மலையாள நடிகர் அன்புச்சகோதரர் மம்மூட்டி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நல்வாழ்த்துகளும்!

    கால்நடை மருத்துவ ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணியமூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    திரைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி நடிகர் மாதவன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    தொடர்ந்து பல ஆகச்சிறந்த கலைப்படைப்புகள் தந்து மென்மேலும் சாதனை படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×