கமல் பிறந்தநாளில் 'தக் லைஃப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.தக் லைஃப் படத்தின் ரீலிஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கமல் பிறந்தநாளில் 'தக் லைஃப்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், பாடகர், நடனக்கலைஞர், சண்டைப் பயிற்சியாளர், என தனது 5 வயதில் இருந்து திரையுலகிற்கு பங்களித்து வரும் பெரும் கலைஞன். அந்த கலைஞனின் பிறந்தநாளை இன்று உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ரீலிஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு சின்ன டீசராக படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் ஜுன் 5-ந் தேதி படம் திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக தக் லைஃப் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் கமல் மற்றும் சிம்புவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப் (Thug Life)'. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com