என் மலர்
நீங்கள் தேடியது "a raja"
- தேர்தல் ஆணையம் ஒழுங்காக இருந்த காலத்தில் தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் பணி.
- தேர்தல் ஆணையம் திருடனாக இருப்பதால் தி.மு.க. களத்தில் இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியாவில் தேர்தல் ஆணையமே திருடனாக மாறிவிட்டது.
* SIR திட்டத்தை அமல்படுத்திய தேர்தல் ஆணையம் திருடன் என்றால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெரும் திருடர்கள்.
* தேர்தல் ஆணையம் ஒழுங்காக இருந்த காலத்தில் தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் பணி.
* தேர்தல் ஆணையம் திருடனாக இருப்பதால் தி.மு.க. களத்தில் இருக்கிறது.
* திருடர்களிடம் இருந்து தேர்தல் ஆணையத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள்.
- அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.
- அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல.
- அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்?
நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அவரது கருத்துக்கு திமுக எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதல்வர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்து தான் வருவார்கள். வாக்குத் திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை திருட முடியாது.
அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டுப் போட்டா தேர்ந்தெடுத்தார்கள்? மக்கள் வாக்களித்தால் யாரும் முதலமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை அமித்ஷா முடிவு செய்ய முடியாது.
மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் தான். வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல.
என ஆ.ராசா கூறினார்.
- உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
- மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த திமுக எம்பி ஆ. ராசா, நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை, ஆ. ராசா அவர்களே! உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு. இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
அதுசரி, திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், "நாம் தான் நம்பர் 1 முதல்வர்" என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள். மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி என்று கூறியுள்ளார்.
- சமீபத்தில் அமித் ஷா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.
- ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.
தமிழகத்தை பிடிக்கப்போவதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முட்டாள் என திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசியதாவது:-
* சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டு காலம் இருக்கும் எனச் சொல்ல முடியாது.
* இந்திரா காந்தி மறைந்தபோது ஆட்சி மாறியது.
* எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்ற போது மாறியது.
* 2ஜி 1.76 லட்சம் கோடி ஊழல் எனச் சொன்னார்கள். அப்போது ஆட்சி மாறியது.
* ஜனநாயகத்தில் நாம் செய்த சாதனைகள் மற்றும் தலைவர்கள் ஆளுமையோடு நிற்காது. எதிரிகள் வெவ்வேறு வடிவில் வருவார்கள்.
* சமீபத்தில் அமித் ஷா, மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டெல்லியை பிடித்துவிட்டோம். ஹரியானாவை பிடித்துவிட்டோம். மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.
* முட்டாள்... முட்டாள்... டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன். ஹியானாவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் தோற்கடித்தது தனி மனிதனை. ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.
இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
- வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
- சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும். தி.மு.க.வை பார்த்து ஷாக் அடித்து தானே அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.
* பிரதமர் எதற்காக 5 முறை தமிழகம் வர வேண்டும்.
* கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்?
* தமிழ் குறித்து தமிழர்கள் குறித்தும் பேசும் மத்திய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுப்பது ஏன்?
* வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
* இல்லாத சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் மொழிக்கு எதற்காக நிதி ஒதுக்கீடு.
* பா.ஜ.க.வின் இந்துமத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அவர்களை பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாகத்தான் உள்ளது.
* நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு 4 மடங்கு வருவாய் உயர்ந்துள்ளது.
* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி.
* பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஒரு திட்டம் உள்ளது.
* சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
* மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- அருவெறுப்பான, வஞ்சனம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
- அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித்ஷா பேசி உள்ளார்.
* தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா சுமத்தி உள்ளார்.
* அருவெறுப்பான, வஞ்சகம் நிறைந்த, மாநிலத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார்.
* தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டு பேசி உள்ளார்.
* அமித்ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது.
* அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் அமித்ஷா பேச்சு உள்ளது.
* அமித்ஷா வகிக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும்.
* அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ள அமித்ஷாவின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
- திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1170 இடங்களில் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தர மறுக்கிறது.
முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் ? மகாத்மா காந்தி என்கிற பெயர் இருப்பதனாலேயே பணம் தர மறுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டதே இவர்கள்தான்.
நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து அளவான குடும்பம் என்று 1970களில் இருந்து நல்ல திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.
மக்கள் தொகை குறைந்து இருந்தாலும், கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கிறோம். வேலை வாயப்பு, உற்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நம்பர் ஒன். சாலை வசதி என அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறோம். இதுதுான் திராவிட மாடல்.
ஆனால் வட மாநிலங்களில் 16, 17 பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்த்து ஆளாக்க முடியாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.
ஆரம்பத்தில் பானிப்பூரி, சுண்டல் என விற்றுவந்தவர்கள் தற்போது பயிர் நடவு செய்ய வந்துவிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி நம்மை பார்த்து இந்தி படியுங்கள், படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆ.ராசா உள்ளிட்ட 5 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
- குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சென்னை:
தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
7 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ண மூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள்டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, ஆ.ராசா உள்ளிட்ட 5 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
- காமராஜரின் மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காமராஜரை பற்றி தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவறான தகவல்களை நாட்டு மக்களிடம் பரப்பி வருவதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
காமராஜர் என்றுமே தோற்றவர் அல்ல. அவர் கொண்டு வந்த கே பிளான் படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி பணிக்கு வந்தார். அவர் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இன்றளவும் தி.மு.க. என்கிற கட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும் என்பதை ஆ.ராசா போன்றவர்கள் உணர வேண்டும். விருதுநகரில் தோற்கடிப்பட்ட காமராஜருக்கு, நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்தார்கள் என்பதை நாடறியும்.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவரது மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.வினர் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை.
- பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ. ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
சென்னை:
பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா-வுக்கு என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்த நாடார் சங்கங்கள் கூட்டத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது.
இக்கூட்டத்தில் முத்துரமேஷ் நாடார், மின்னல் ஸ்டீபன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், கொளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-
பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
பொய்யான தகவல்களை பொது மேடைகளில் பேசி அதை மெய்யாக்கி முந்தைய வரலாற்றை மாற்றி தங்கள் தான் உத்தமர்கள் போன்ற மாயையை பரப்பும் தி.மு.க. வினரின் முகமுடியை கிழித்தெறிய வேண்டும் என்று இக்கூட்டம் அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவோம் என்று இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கிறது.
தொடர்ந்து கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திரித்து தவறுதலாக பேசி வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருந்தலைவர் தொண்டர்களும், பக்தர்களும் ஒருபோதும் தி.மு.க.வை மன்னிக்க மாட்டார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று இக்கூட்டம் வாயிலாக தெரியபடுத்துகிறோம்.
இக்கூட்டத்தில் டி.எஸ்.எஸ். நாடார் சங்கத்தலைவர் மனோகரன், போரூர் நாடார் சங்கத்தலைவர் ஆனந்தராஜ், முகப்பேர் வட்டார நாடார் மகாஜன சங்கத்தலைவர் தேன்ராஜன், நாடார் பாதுகாப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அயனாவரம் சந்திரமோகன், ஆவடி வட்டார நாடார் சங்கம் ராஜன், கோவில்பதாகை முரளி, கிராமணி முன்னேற்ற சங்கத்தலைவர் பச்சையப்பன், மட்டுமேடு அருணாசல மூர்த்தி, திருவல்லிக்கேணி நாடார் சங்க பொதுச்செயலாளர் சிவராஜ், மாதவரம் தங்கக்குமார், இருவொற்றியூர் வீரமணி, விருகம்பாக்கம் மணிராஜ், மாங்காடு துரை, கெருகம பாக்கம் பாலமுருகன், உதய குமார், ஓட்டேரி செல்வராஜ், கோயம்பேடு முத்து, பாண்டியநாட்டு நாடார் பேரவை கொளத்தூர் சுவைராஜா, கொளத்தூர் ஜேம்ஸ் நாடார், கோயம்பேடு வைகுண்டராஜா, வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், பாதாவரம் நாடார் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
- பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
விசாரணைக்கு பின்பு ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்களான கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகினர்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






