என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக் அடிக்கிறது - ஆ.ராசா
- வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
- சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ஷாக் அடிக்க வேண்டும். தி.மு.க.வை பார்த்து ஷாக் அடித்து தானே அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.
* பிரதமர் எதற்காக 5 முறை தமிழகம் வர வேண்டும்.
* கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்?
* தமிழ் குறித்து தமிழர்கள் குறித்தும் பேசும் மத்திய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுப்பது ஏன்?
* வடக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள்.
* இல்லாத சரஸ்வதி நதி, சமஸ்கிருதம் மொழிக்கு எதற்காக நிதி ஒதுக்கீடு.
* பா.ஜ.க.வின் இந்துமத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. அவர்களை பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாகத்தான் உள்ளது.
* நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு 4 மடங்கு வருவாய் உயர்ந்துள்ளது.
* அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி.
* பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஒரு திட்டம் உள்ளது.
* சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம்.
* மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






