search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NR Thanapalan"

    • 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஆங்காடு பகுதி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கிரிஜா நித்யானந்தம், துணைத் தலைவர் மதன்ராஜ், செயலாளர் தனசேகர், பன்னீர்வாக்கம் பகுதி முன்னாள் வார்டு உறுப்பினர் மோகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், நிர்வாகிகள் டி.உதயகுமார், கே.காமராஜ், நல்லதம்பி, எடப்பாளையம் செந்தில்குமார், மகாராஜன், இலங்காமணி, காந்திநகர் அந்தோணி, தட்சிணாமூர்த்தி, ஆனந்தகண்ணன், எம்.வைகுண்டராஜா, பாபாஜி, முருகேச பாண்டி, முருகக்கனி, முகமது அப்துல்காதர், சங்கரலிங்கம், சண்முகம், ஆர்.பாலமுருகன், சுப்பிரமணி, ராஜ்நாடார், சீனிப் பாண்டியன், ஆண்டனி பீட்டர், உத்திர குமார், ரமேஷ், சுரேஷ், வண்ணை மோகன், எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், ரமேஷ், மடிப்பாக்கம் ரவி, சி.பி.செல்வன், செல்வபாண்டி, ஆத்திசாமி, டாக்டர் பிரேம்சந்த், காசிராஜன், வசந்தகுமார் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது.
    • அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்தியாவில் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர், உணவு பஞ்சம் ஏற்பட்ட போது அதற்கான தீர்வை கண்டு உணவு பாதுகாப்புக்கான பங்களிப்பை தந்தவர். வேளாண் தொழில் பற்றிய முற்போக்கான சிந்தனை கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

    அதேபோன்று இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதினை மறைந்த தலைவருக்கு வழங்கி அவருக்கும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்ட வேளாண் பற்றிய ஆராய்ச்சிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மனித இனத்தையே வெட்கி தலைகுனிய வைத்த செயலாகும்.
    • கலவரம், வன்முறை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் தொடர்ந்து நடந்துவரும் கலவரம் மற்றும் கொடூரமான வன்கொடுமைகளுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலவரக்காரர்கள் பழங்குடி இன பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்று வயல்வெளிகளில் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை மனித இனத்தையே வெட்கி தலைகுனிய வைத்த செயலாகும்.

    இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காத வண்ணம் கலவரக்காரர்களை இரும்பு கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். கலவரம், வன்முறை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காமராஜரின் உருவ படத்தை விமான நிலைய வளாகத்தில் வைத்திருப்பதை கண்டு காமராஜரின் தொண்டர்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
    • தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான காமராஜரின் தொண்டர்கள் தங்களை போற்றி வணங்குவார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    சென்னை விமான நிலையம் விரிவாக்கம் பணிகள் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகிய பிறகு, எங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று மீண்டும் விமானங்களில் சென்னை காமராஜர் விமான நிலையம் வந்தடைந்துள்ளோம் என்கிற முறையான அறிவிப்பு வெளியிட்டு வருவதும், மீண்டும் காமராஜரின் உருவ படத்தை விமான நிலைய வளாகத்திற்குள் வைத்திருப்பதையும் கண்டு காமராஜரின் தொண்டர்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

    அதே போன்று சென்னையில் சுமார் ரூ.2,400 கோடியில் புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட விமான நிலையத்தை வருகிற 27-ந்தேதி அன்று தங்களின் திருக்கரங்களால் திறந்த வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நல்ல வேளையில் பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலை நிறுவப்படும் என்கிற அறிவிப்பை தாங்கள் வெளியிட்டால் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான காமராஜரின் தொண்டர்கள் தங்களை போற்றி வணங்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தவறான கருத்தை பதிவு செய்கிறார்.
    • காமராஜரின் மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரை பற்றி தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவறான தகவல்களை நாட்டு மக்களிடம் பரப்பி வருவதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழ்நாடு என்று சொல்லாததால் தான் காமராஜர் தோற்றுப்போனார் என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தவறான கருத்தை பதிவு செய்கிறார்.

    காமராஜர் என்றுமே தோற்றவர் அல்ல. அவர் கொண்டு வந்த கே பிளான் படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சி பணிக்கு வந்தார். அவர் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இன்றளவும் தி.மு.க. என்கிற கட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போயிருக்கும் என்பதை ஆ.ராசா போன்றவர்கள் உணர வேண்டும். விருதுநகரில் தோற்கடிப்பட்ட காமராஜருக்கு, நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் அளித்தார்கள் என்பதை நாடறியும்.

    பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 47 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவரது மங்காபுகழை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.வினர் பேசி வருவது ஏற்புடையதல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×