என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி விழா"

    • லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது.
    • குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும்.

    தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்தால் செல்வத்தையும், ஐஸ்வரியத்தையும் அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது இந்த நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது. இந்த வழிபாட்டில், நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்வது, குபேரர் மற்றும் லட்சுமி தேவியின் அருள் பெறவும், பொருளாதார கஷ்டங்களை நீக்கி, நிலையான செல்வத்தை பெற உதவும் என்பது நம்பிக்கை.

    குபேர பகவானுக்கு உகந்த எண் 5. அதனால் ஒரு தட்டில் உங்கள்  கை நிறையும் அளவிற்கு 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

    இப்படி செய்யும் போது குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும். போற்றி சொல்லியபடியே தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அந்த ஒலியோடு சேர்ந்து குபேர மந்திரங்களை சொல்ல வேண்டும்.

    நாணய பூஜை செய்து முடித்தவுடன் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி நாணய வழிபாடு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

    இந்த வழிபாட்டை தீப ஒளித் திருநாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரையும் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் செய்ய வேண்டும்.

    • பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும்.
    • நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும்.

    தொழில் ரீதியிலான வளர்ச்சி வேண்டுமென்றால் லட்சுமி குபேர பூஜையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது தொழில் மேன்மை பெறும். வீட்டிலும் எப்போதும் தானிய வகைகள் நிரம்பி இருக்கும். உத்தியோகம், ஊதிய உயர்வு மற்றும் பணவரவு அதிகரிக்கும்.

    லட்சுமி குபேர பூஜை செய்தால் அந்த லட்சுமி குபேரர் உங்களின் தீராத கடன்களையும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும். கடன் தீர்வது மட்டுமின்றி உங்களுக்கு கிடைக்கும் சொத்து பல்கிப் பெருகி பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.

    நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பெருகும்.

    பணம், சொத்து என பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதன் அதை சம்பாதிக்கும் போது பலரது ஆசிகளை இழப்பது மட்டுமின்றி அறிந்தோ, அறியாமலோ பலவித பாவங்களையும், சாபத்தையும் சம்பாதிக்கிறான். ஒருவருக்கு கெடுதல் செய்தால் தான் பாவம் என்று அர்த்தமில்லை. ஒருவரை மனதளவில் காயப்படுத்திவிட்டாலும் அதுவும் பாவம் தான்.

    காலம் முழுவதும் தான் சுகமாக வாழ பிறரை வஞ்சித்தும், சாபத்தைப் பெற்றும் வாழும் மனிதர்களுக்கு அருளோ கடவுளின் ஆசியோ கிடைப்பதரிது. ஏனென்றால் குரோதம், மோகம், ஆணவம் ஆகிய இம்மூன்றும் செல்வத்தால், பொருளால் வருவது. இவை இருந்தால் நிச்சயமாக கடவுளின் அருள் கிடைக்காது.



    பாவங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்றால் பாவங்கள் போய்விடுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் கோவில்களுக்குச் செல்வதால்- தானதர்மம் வழங்குவதால் ஒருவர் பாவங்களை ஒருபோதும் அழிக்கமுடியாது. சக மனிதர்களிடம் அன்பு, பணிவு, அமைதி ஆகியவை இருந்தால், கடவுளின் அருளோடு பொருளும் தானாக வந்துசேரும்.

    உங்களின் பாவங்களைப் போக்கி இந்த தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட லட்சுமி குபேரரிடம், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி வழிபாடு செய்யுங்கள். இறை அருளோடு நிரம்பிய பொருள் பெற்று நல்வாழ்வு பெறுங்கள்.

    • குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர்.
    • செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன்.

    செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும்.

    ஸ்ரீ லட்சுமி குபேரன் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.

    குபேர பூஜையினை புதன் ஓரையில் செய்வது மிகுந்த செல்வ வளத்தினை தரும். மேலும் குபேரன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரத்தன்றோ அல்லது வியாழக்கிழமை நாட்களிலோ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும்.

    குபேரனுடைய நடத்தையை மெச்சி, எட்டு திசைகளில், ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி. செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன். அவரை வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.

    • பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
    • தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.

    தீபாவளியை ஒட்டி மக்கள் செய்யும் வழிபாட்டில் குபேர லட்சுமி வழிபாடு முக்கியமானது. இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

    பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது.

    தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா நீராடல் செய்த பிறகு, பூஜை அறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.

    லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.

    பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

    தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழை இலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி... அஷ்டலட்சுமியே போற்றி... குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம்.

    தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    • 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஆங்காடு பகுதி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஆங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கிரிஜா நித்யானந்தம், துணைத் தலைவர் மதன்ராஜ், செயலாளர் தனசேகர், பன்னீர்வாக்கம் பகுதி முன்னாள் வார்டு உறுப்பினர் மோகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், நிர்வாகிகள் டி.உதயகுமார், கே.காமராஜ், நல்லதம்பி, எடப்பாளையம் செந்தில்குமார், மகாராஜன், இலங்காமணி, காந்திநகர் அந்தோணி, தட்சிணாமூர்த்தி, ஆனந்தகண்ணன், எம்.வைகுண்டராஜா, பாபாஜி, முருகேச பாண்டி, முருகக்கனி, முகமது அப்துல்காதர், சங்கரலிங்கம், சண்முகம், ஆர்.பாலமுருகன், சுப்பிரமணி, ராஜ்நாடார், சீனிப் பாண்டியன், ஆண்டனி பீட்டர், உத்திர குமார், ரமேஷ், சுரேஷ், வண்ணை மோகன், எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், ரமேஷ், மடிப்பாக்கம் ரவி, சி.பி.செல்வன், செல்வபாண்டி, ஆத்திசாமி, டாக்டர் பிரேம்சந்த், காசிராஜன், வசந்தகுமார் கலந்து கொண்டனர்.

    ×