என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாவம் விலகிட லட்சுமி குபேரரிடம் மன்னிப்பு கேளுங்கள்..!
    X

    பாவம் விலகிட லட்சுமி குபேரரிடம் மன்னிப்பு கேளுங்கள்..!

    • பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும்.
    • நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும்.

    தொழில் ரீதியிலான வளர்ச்சி வேண்டுமென்றால் லட்சுமி குபேர பூஜையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது தொழில் மேன்மை பெறும். வீட்டிலும் எப்போதும் தானிய வகைகள் நிரம்பி இருக்கும். உத்தியோகம், ஊதிய உயர்வு மற்றும் பணவரவு அதிகரிக்கும்.

    லட்சுமி குபேர பூஜை செய்தால் அந்த லட்சுமி குபேரர் உங்களின் தீராத கடன்களையும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும். கடன் தீர்வது மட்டுமின்றி உங்களுக்கு கிடைக்கும் சொத்து பல்கிப் பெருகி பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.

    நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பெருகும்.

    பணம், சொத்து என பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதன் அதை சம்பாதிக்கும் போது பலரது ஆசிகளை இழப்பது மட்டுமின்றி அறிந்தோ, அறியாமலோ பலவித பாவங்களையும், சாபத்தையும் சம்பாதிக்கிறான். ஒருவருக்கு கெடுதல் செய்தால் தான் பாவம் என்று அர்த்தமில்லை. ஒருவரை மனதளவில் காயப்படுத்திவிட்டாலும் அதுவும் பாவம் தான்.

    காலம் முழுவதும் தான் சுகமாக வாழ பிறரை வஞ்சித்தும், சாபத்தைப் பெற்றும் வாழும் மனிதர்களுக்கு அருளோ கடவுளின் ஆசியோ கிடைப்பதரிது. ஏனென்றால் குரோதம், மோகம், ஆணவம் ஆகிய இம்மூன்றும் செல்வத்தால், பொருளால் வருவது. இவை இருந்தால் நிச்சயமாக கடவுளின் அருள் கிடைக்காது.



    பாவங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்றால் பாவங்கள் போய்விடுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் கோவில்களுக்குச் செல்வதால்- தானதர்மம் வழங்குவதால் ஒருவர் பாவங்களை ஒருபோதும் அழிக்கமுடியாது. சக மனிதர்களிடம் அன்பு, பணிவு, அமைதி ஆகியவை இருந்தால், கடவுளின் அருளோடு பொருளும் தானாக வந்துசேரும்.

    உங்களின் பாவங்களைப் போக்கி இந்த தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட லட்சுமி குபேரரிடம், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி வழிபாடு செய்யுங்கள். இறை அருளோடு நிரம்பிய பொருள் பெற்று நல்வாழ்வு பெறுங்கள்.

    Next Story
    ×