search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Ratna Award"

    • ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார்.
    • பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

     


    கர்பூரி தாக்கூர் 1970-71 மற்றும் 1977 முதல் 79 காலக்கட்டங்களில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நாளை (ஜனவரி 24) கர்பூரி தாக்கூரின் பிறந்த தினம் என்ற வகையில், இன்று அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது.
    • அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்தியாவில் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர், உணவு பஞ்சம் ஏற்பட்ட போது அதற்கான தீர்வை கண்டு உணவு பாதுகாப்புக்கான பங்களிப்பை தந்தவர். வேளாண் தொழில் பற்றிய முற்போக்கான சிந்தனை கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

    அதேபோன்று இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதினை மறைந்த தலைவருக்கு வழங்கி அவருக்கும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்ட வேளாண் பற்றிய ஆராய்ச்சிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
    • மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60- வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தரும் முக்குலத்து சொந்தங்கள், அரசியல்வாதிகள் மலர் வளையம் கொண்டுவர வேண்டாம். மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் பாலத்திற்கு சேதுபதி பாலம் என பெயர் சூட்ட வேண்டும். அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சீர் மரபினராகிய தேவரினத்தை சேர்ந்தவர்களை உறுப்பி னர்களாக அறிவிக்க வேண்டும். நேதாஜி படம், பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் படத்தையும் இந்திய அளவில் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மூவரையும் தேவர் என ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய கருணாநிதிக்கு இந்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர், கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்று விட்டார்கள்.

    ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் அணைந்து போனது. ஓயாத கடல் அலை போல உழைத்துக் கொண்டிருந்த ‘தமிழர்களின் சகாப்தம்’ தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.

    இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்த மக்கள் தலைவர் கலைஞர் ஒருவரே என்றால் அது மிகையல்ல.

    மேடையில் வீசிய மெல்லியப் பூங்காற்றாய், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவர், தன் ஈடற்ற எழுத்து வன்மையால் தமிழ் அன்னைக்கு முத்தாரங்கள் பலவற்றை அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்த வித்தகப் பெருமகன் கலைஞர்.

    வான்புகழ்கொண்ட வள்ளுவரின் குறளுக்கு அவர் தீட்டிய ‘குறளோவியம்’ தமிழரின் தொன்மைச் சிறப்பை இயம்பும் ‘தொல்காப்பியப் பூங்கா’, தமிழ் இனத்தின் பழைய பண்பாட்டின் புதிய வடிவத்தை கண்முன் நிறுத்தும் ‘சங்கத் தமிழ்’, கடலாண்ட தமிழனின் வரலாற்றைக் கூறும் ‘ரோமாபுரிப் பாண்டியன்’, தமிழ் மண்ணின் வீரம் மணக்கும் ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பொன்னர் சங்கர்’ போன்றவை கலைஞரின் சாகாவரம் பெற்ற இலக்கியப் படைப்புகள் ஆகும்.


    தமிழ்த் திரை உலகில் பேனா முனையில் புரட்சி கர வசனங்கள் தீட்டி, வண்ணத் தமிழுக்கு மேலும் அணிசேர்த்து காவியப் புகழ் கொண்டவர் கலைஞர்.

    ஐந்துமுறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, மக்கள் பணி ஆற்றிய கலைஞர், ஆட்சித் துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்.

    இந்திய ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப்பேரவையில் ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கலைஞருக்கு மட்டுமே உரியது ஆகும்.

    திராவிட இயக்கத்தின் ஆணி வேரான ‘சமூக நீதி’ தழைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

    செம்மொழித் தமிழுக்கு சிறப்பான திட்டங்களால் பெருமை சேர்த்தவர். எண்ணிலடங்கா சமூக நலத் திட்டங்களுக்கு முன்னோடியான மாநிலம் தமிழ்நாடு என்ற கீர்த்தி கலைஞரால்தான் கிடைத்தது.

    பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கிட சட்டம், வேளாண்மை செழிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சி, தொழில் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, இவையெல்லாம் கலைஞரின் ஆட்சித் திறனுக்கு சான்று கூறும் சரித்திரச் சாதனைகள் ஆகும்.

    தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ கொண்டு வந்த பெருமை கலைஞரையே சேரும்.

    இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய கலைஞருக்கு இந்திய அரசு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #Karunanidhi #MDMK #Vaiko

    கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் திமுக எம்பி கோரிக்கை விடுத்தார். #BharatRatna #Karunanidhi
    புதுடெல்லி:

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.



    இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். #BharatRatna #Karunanidhi
    ×