search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தல்
    X

    இசக்கிராஜாத்தேவர் 

    முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தல்

    • பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
    • மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60- வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் கே.என்.இசக்கிராஜாத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகை தரும் முக்குலத்து சொந்தங்கள், அரசியல்வாதிகள் மலர் வளையம் கொண்டுவர வேண்டாம். மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் பாலத்திற்கு சேதுபதி பாலம் என பெயர் சூட்ட வேண்டும். அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சீர் மரபினராகிய தேவரினத்தை சேர்ந்தவர்களை உறுப்பி னர்களாக அறிவிக்க வேண்டும். நேதாஜி படம், பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் படத்தையும் இந்திய அளவில் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மூவரையும் தேவர் என ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×