என் மலர்
நீங்கள் தேடியது "Madurai Bench of the High Court"
- அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
- டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27-ந் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28-ந் தேதி அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில், அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில், அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டி.எஸ்.பி. விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனது பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்" என குறிப்பிட்டு வழக்கை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும்
- தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றங்கள் கோயில் வழிபாடுகளில் தமிழைப் பயன்படுத்துவதை உறுதி செய்யப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மூலம் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021-இல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் முதன்முதலாகத் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 47-க்கும் மேற்பட்ட முக்கிய பெரிய கோயில்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதுபோல முறையான பயிற்சிப் பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 2008 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில், ஆகம விதிகள் எங்கும் தமிழில் மந்திரங்கள் ஓதுவதைத் தடை செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கரூர் கல்யாண வெங்கடரமண சாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் பாசுரங்களை ஓத வேண்டும்; தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரவு பின்பற்றப்படுகிறதா என குடமுழுக்கு முடிந்தபின் கோயில் செயல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
- ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்
- நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு அளித்தநிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்; உண்மைகளை மதிப்பிடுதல் மற்றும் சட்டத்தை விளக்குதல்.
இதில் ஒன்று தவறினால், அது அபத்தமாகிவிடும்!
இரண்டுமே தவறினால், அது சங்கடமாகிவிடும்!
நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் கூறுவார், "நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன. அதன் விளைவு எப்படி இருக்கும்?" முருகனுக்கு அரோகரா" எனக் குறிப்பிட்டுள்ளார்.






