search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி தேவஸ்தானம்"

    • திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.
    • 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.

    கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் ரூ.116.46 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 1.03 கோடி லட்டு விற்பனையானது.

    7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
    • திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

    இதேபோல் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

    இலவச தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலையுடன் தீர்ந்தது.

    இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கோவிலில் நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் திரும்பி வருகின்றனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டு களை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.

    திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் ஒரு சதவீதம் அல்லது ரூ.36 கோடியை திருப்பதி மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு ஒதுக்குவது என தேவஸ்தானம் முடிவு செய்தது.

    பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்க பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதி ஒதுக்கீடுக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்க வேண்டாம் என நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு நிராகரித்துள்ளது.

    இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கரிகால் வளவன் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    • கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.
    • கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக சுப்பா ரெட்டியும், 28 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்களை நீக்கிவிட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாகவும் மக்களிடையே நெருக்கமாக உள்ள கட்சியினருக்கு புதிய பதவி வழங்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படும் என கூறப்படுகிறது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் தற்போது வரை கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.

    எனவே கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,024 பேர் தரிசனம் செய்தனர். 32,688 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.96 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.
    • வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தூப தீப நெய்வேத்திய சமர்ப்பணங்களுக்கு நாட்டு பசுக்கள் மூலம் பெறப்பட்ட பால் தயிர் வெண்ணெய் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கு 500 நாட்டுப் பசுக்கள் தேவையாக உள்ளது. தற்போது திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.

    மேலும் 300 உயர் ரக நாட்டுப் பசுக்களை நன்கொடையாக வழங்க பக்தர்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில் பால் உற்பத்திக்காக தேவஸ்தான கோசாலையில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அதிக பால் உற்பத்தி கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகைத்தாய் போன்ற முறையில் கலப்பினங்களாக உற்பத்தி செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

    வட மாநிலங்களில் உள்ள உயர்ரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

    அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி கோசாலையில் வளர்த்து வருகின்றனர் .

    நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் பசு வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    இந்த கன்று குட்டிக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர் ரக சாகிவால் கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
    • ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

    ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

    இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.

    இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது. 

    • குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை செய்யப்பட்டது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    சென்னை அணியின் வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து வெற்றிக்கோப்பையுடன் சென்னை அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் நேற்று மதியம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களோடு ஐ.பி.எல். வெற்றிக்கோப்பையும் எடுத்து வரப்பட்டது.

    இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சி.எஸ்.கே அணி வென்ற ஐ.பி.எல். கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    • திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது.
    • புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த கோவில் 12 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த திருப்பதி தேவஸ்தான கோவிலை மீண்டும்

    கட்டக்கோரி, புதுவை மக்கள் தேவஸ்தானத்திடம் பலமுறை புகார் செய்தனர். இதுவரையில் புதிதாக கோவில் கட்டப்படவில்லை.

    புதிய கோவில் கட்ட வலியுறுத்தி புதுவை ஆன்மீக சபைகள், பாகவதர்கள், பொதுமக்கள், திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி ஆகியவை சார்பில் தேவஸ்தான சேர்மன், நிர்வாக அதிகாரிகள், புதுவை முதலமைச்சர், ஆந்திர கவர்னர் மற்றும் ஆந்திர அரசிடமும் கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது. பழைய கோவில்களை புதுப்பித்து வருகிறது. ஆனால் புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

    இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசை கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பில் புதுவை திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் பாலாஜி பாகவதர்கள், ஆன்மீக மன்றங்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பதி தேவஸ்தானம் லைசென்ஸ் புதுப்பித்தலில் கவனம் செலுத்தவில்லை.
    • மத்திய உள்துறையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துறை 2019-ல் கண்டுபிடித்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் பக்தர்களும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் உண்டியலில் நகை, அந்தந்த நாட்டு கரன்சி நோட்டுகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேரடியாக தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் தங்களது நாட்டு கரன்சி நோட்டுகளை ஆன்லைனில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இவ்வாறு வெளிநாட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாடு சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பெற்ற உரிமத்தை திருப்பதி தேவஸ்தானம் புதுப்பிக்காத காரணத்தால், மத்திய உள்துறை அமைச்சகம் ரூ. 3.19 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் ட்வீட் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. உரிமம் புதுப்பிக்கப்படாததால் இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாடுகளில் இருந்து வந்த கரன்சி நோட்டு பரிமாற்றத்திற்கு உடன்படவில்லை.

    ஏழுமலையான் கோவில் உண்டியலில் பணம் அல்லது விலைமதிப்பற்ற தங்கம், வைரம் மற்றும் பிற பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதை கணக்கு காட்ட வேண்டியதில்லை. பெரும்பாலும் பெயர் தெரியாத பக்தர்களால் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.

    அதே சமயம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனத்திற்குப் பிறகு உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.

    அவற்றில் அந்தந்த நாடுகளின் கரன்சியும் அடங்கும். முன்னதாக அந்த வெளிநாட்டு பணம் ரிசர்வ் வங்கி மூலம் தேவஸ்தானத்திற்கு நமது நாட்டு பணமாக மாற்றப்பட்டது. 2018-க்குப் பிறகு இதுபோன்ற பண மாற்றத்தை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. தவிர, தேவஸ்தான கணக்கில் வெளிநாட்டு கரன்சிகளை டெபாசிட் செய்ய எஸ்.பி.ஐ வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.

    இதனால் 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் ரூ.30 கோடி வெளிநாட்டுப் பணம் தேவஸ்தான கணக்கில் டெபாசிட் செய்யப்படாமல், எஸ்பிஐ வங்கியில் கிடக்கிறது.

    வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்க மத்திய உள்துறையிடம் இருந்து வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தேவஸ்தானம் உரிமம் பெற்றுள்ளது.

    அதன் காரணமாக 2018-ம் ஆண்டு வரை அந்நியச் செலாவணி மாற்றத்தை ரிசர்வ் வங்கி அனுமதித்தது. தேவஸ்தான கணக்கில் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்வதையும் எஸ்பிஐ பயன்படுத்தியது. உரிமம் 2018-ல் காலாவதியானது.

    திருப்பதி தேவஸ்தானம் லைசென்ஸ் புதுப்பித்தலில் கவனம் செலுத்தவில்லை. மத்திய உள்துறையின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துறை இதை 2019-ல் கண்டுபிடித்தது.

    உரிமம் இல்லாமல் வெளிநாட்டு நன்கொடை வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து தேவஸ்தானத்திற்கு ரூ.1.14 கோடி அபராதம் விதித்துள்ளது.

    2020-ல் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, வெளிநாட்டு நன்கொடைகளில் கிடைக்கும் வட்டியை அந்தந்த நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது.

    இதனால் திருப்பதி தேவஸ்தானம் வட்டியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வருமான விவரங்களை சரியானபடி வழங்காததற்காக தேவஸ்தானத்திற்கு ரூ.3.19 கோடி அபராதம் விதித்தது.

    இதன் மூலம் அபராதத் தொகை ரூ.4.33 கோடியை எட்டியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு அபராதம் விதித்துள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசாரம் செய்யும் இந்து அறநிலைய அமைப்பான தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்ததற்காக மத்திய பாஜக அரசை அவர் குற்றம் சாட்டினார்.

    இது அரசியல் சர்ச்சையாக மாறி வருகிறது. தேவஸ்தானம் ஏன் சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை? அதாவது தற்போதைய அதிகாரிகளோ, அதிகார வர்க்கமோ சரியான பதில் சொல்வதில்லை.

    உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியதைத் தவிர, மீடியாக்கள் மூலம் பக்தர்களுக்கு விவரம் தெரிவிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாததால், பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது.

    வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளை தேவஸ்தானம் பின்பற்றாதது மற்றும் மத்திய உள்துறையின் வழிகாட்டுதலின்படி வருமான விவரங்களை சரியானபடி சமர்ப்பிக்காதது தான் அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் என்பது தெளிவாகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் உண்டியல் மூலம் சுமார் ரூ.30 கோடி அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது.

    • ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
    • பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பல்வேறு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் டைம் ஸ்லாட் முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 டிக்கெட்டுகளும், ஸ்ரீவாணி அறக்கட்டளை ஆயிரம் டிக்கெட்டுகளும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்காரம், சுப்ரபாதம் சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாததால் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய சிரமம் அடைகின்றனர். இதனால் குறுக்கு வழியில் தரிசன டிக்கெட்டுகளை பெற திருப்பதியில் உள்ள புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.

    அங்குள்ள புரோக்கர்கள் போலி இணைய தளத்தை உருவாக்கி தரிசன டிக்கெட்களை போலியாக தயார் செய்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் போலி இணையதளத்தை உருவாக்கிய நபர் ஒருவர் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் ரூ 10 ஆயிரத்து 500க்கு கிடைக்கும் என அவரது செல்போன் என்னுடன் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்தார். தேவஸ்தான அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிய வந்தது.இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் போலி இணையதளத்தை முடக்கினர். மேலும் வாட்ஸ் அப்பில் தரிசன டிக்கெட் கிடைக்கும் என பதிவு செய்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

    இருப்பினும் சில பக்தர்கள் புரோக்கர்களை நாடி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்ததாக பல புரோக்கர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 77,522 பேர் தரிசனம் செய்தனர்.32,390 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது.
    • பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பேருந்தில் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

    • தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதற்காக தரிகொண்ட வெங்கமாம்பா தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
    • கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அதன் அருகிலேயே புல் மற்றும் தீவனம் வளர்க்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதற்காக தரிகொண்ட வெங்கமாம்பா தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    தியான மண்டபத்தை தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூடுதல் செயல் அலுவலர்கள் சதாபார்கவி, வீரபிரம்மம், நரசிம்ம கிஷோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

    கோவில்கள் கட்டப்படும் இடங்களை சேர்த்து 24 இடங்களில் தேவஸ்தானம் சார்பில் கோசாலைகள் அமைக்கப்பட உள்ளது. கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அதன் அருகிலேயே புல் மற்றும் தீவனம் வளர்க்கப்படும். தற்போது திருப்பதி மற்றும் பலமனேர் கோசாலையில் உள்ள பசுக்கள் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

    இதேபோல் புதிதாக அமைக்கப்படும் கோசாலைகளும் சிறப்பாக பராமரிக்கப்படும் என்றார்.

    ×