என் மலர்
இந்தியா

விபத்து, சிறுத்தை தாக்குதல் எதிரொலி- திருப்பதி பக்தர்களுக்கு காப்பீட்டு வசதி தேவஸ்தானம் பரிசீலனை
- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
- திருப்பதி மலையில் விபத்துகளில் இறப்பவர்களுக்கு தேவஸ்தானம் ரூ.3 லட்சம் வரை வழங்கி வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். 2 மலை சாலைகள் அலிபிரி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகள் திடீர் நோய் காரணமாக இறப்பு, நடைபாதையில் காட்டு விலங்குகள் தாக்குதல்கள் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விபத்துகள் திடீர் மாரடைப்பு மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்கு தாக்குதல்களில் இறப்பவர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து திருப்பதி தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
தற்போது திருப்பதி மலையில் விபத்துகளில் இறப்பவர்களுக்கு தேவஸ்தானம் ரூ.3 லட்சம் வரை வழங்கி வருகிறது.
இப்போது பக்தர்கள் அலிபிரிக்கு திருமலைக்கும். திருமலையில் இருந்து அலிபிரிக்கு வரும் வரை காப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.
அதிக எண்ணிக்கையில் வரும் பக்தர்களுக்கு காப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்கள் வசூலிக்கும் பிரீமியம் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பு போன்ற பிரச்சனைகள் குறித்து சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.






