என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bihar government"

    • பாட்னாவின் முக்கிய பகுதியான மொகாமாவில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது.
    • பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தை

    பீகாரின் தலைநகரான பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் (ஏழுமலையான் கோயில்) கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு. பீகார் தலைமைச் செயலாளர் பிரத்யா அம்ரித், திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில், இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

    பாட்னாவில் முக்கிய பகுதியான மொகாமா பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிலம் 99 ஆண்டுகளுக்கு ரூ. 1 என்ற குத்தகை வாடகையுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் என். லோகேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்றுள்ளனர். பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்ட ஒப்புக்கொண்டதற்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கை பீகார் அரசின் கலாச்சார உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றார். மேலும் கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடவும், செயல்படுத்தவும் பீகார் மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநருடன், திருப்பதி தேவஸ்தான குழு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.  

    பீகார் காப்பகத்தில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணியில் ராகுல் காந்தி , தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றார். #RahulGandhi #Muzaffarpurshelterhome #Delhiprotest
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றுள்ளது. இங்கு சுமார் 40 சிறுமியர் தங்கியுள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

    இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அவமானத்துக்குரியது, பீகாரை தலைகுனிய வைத்துள்ளது என பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் குறிப்பிட்டார். இதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த கொடூரத்தை கண்டித்தும் முசாபர்பூர் சிறுமியர் காப்பகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பீகார் அரசிடம் நீதி கேட்டு ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி சார்பில் இன்றிரவு தலைநகர் டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது.

    பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மா. கம்யூ தலைவர் பிரகாஷ் கரத், இ கம்யூ தலைவர் டி.ராஜா, லோக்தந்த்ரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ்  உள்பட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    அவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் இங்கு திரண்டிருக்கிறோம். முசாபர்பூர் காப்பக சம்பவத்துக்காக முதல்- மந்திரி நிதிஷ் குமார் அவமானப்பட்டால் மட்டும் போதாது.  உடனடியாக கடுமையான நடவடிக்கையும் எடுத்தாக வேண்டும் என குறிப்பிட்டார். #RahulGandhi #Muzaffarpurshelterhome  #Delhiprotest
    ×