search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patna"

    • இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது
    • பீகார் அரசியலின் 'நரம்பு மையம்' நாட்டில்மாற்றம் வரும்போது எல்லாம் இங்கு இருந்துதான் தொடங்குகிறது

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) சார்பில் 'ஜன்விஸ்வாஸ்' பேரணி நடந்தது.இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

    இந்த பேரணியில் ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத்யாதவ்,தேஜஸ்வி யாதவ்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர்.இந்த பேரணியில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது ராகுல்காந்தி எம்.பி. பேசியதாவது:-

    பீகார் அரசியலின் 'நரம்பு மையம்'. நாட்டில் மாற்றம் வரும் போது எல்லாம் அது பீகாரில் இருந்துதான் தொடங்குகிறது. இதன் பிறகு இந்த மாற்றம் மற்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது. இன்று நாட்டில் சித்தாந்தங்கள் மீது சண்டை நடக்கிறது. வெறுப்பும், வன்முறையும், ஆணவமும் இருக்கிறது. மறுபுறம், ஒருவருக்கொருவர் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மரியாதை உள்ளது.

    பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகிறது.. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால் நாட்டில் வெறுப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    மத்தியஅரசு ஒருசில 10 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் சில தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை மோடி அரசு தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.1500 கடன் தொகையை வட்டியுடன் முழுவதும் செலுத்தி விட்டார்
    • காவல் அதிகாரிகளின் விசாரணையால் ஆத்திரமடைந்தார் பிரமோத்

    பீகாரின் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ளது குஸ்ருபூர் நகரம். இங்குள்ள மோஷிம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தலித் பெண்ணிற்கு பண நெருக்கடி ஏற்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு பண தட்டுப்பாட்டால் அதே ஊரில் வசிக்கும் பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1500 கடனாக பெற்றார். இதற்கான வட்டி தொகையுடன் கடனை முழுவதுமாக அவர் திருப்பி செலுத்தி விட்டார். ஆனால், பிரமோத் மற்றும் அவரது மகன் அன்சு சிங் இருவரும் அந்த தலித் பெண் மேலும் வட்டி செலுத்த வேண்டும் என கூறி வற்புறுத்தி வந்தனர். ஆனால், அப்பெண்மணி இதற்கு மறுத்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் பிரமோத் சிங் அப்பெண்ணை பணத்தை தரா விட்டால் நிர்வாணமாக்கி ஊரில் நடக்க விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அப்பெண்மணி குஸ்ருபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் அதிகாரிகள் பிரமோத்தை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் பிரமோத் காவல் நிலையம் சென்றார்.

    இதில் ஆத்திரமடைந்த பிரமோத் அன்றிரவு தனது நண்பர்கள் சிலருடன் அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்று அவரை கடத்தி, தனது வீட்டிற்கு பலவந்தமாக தூக்கி வந்தார். பிறகு அவரை தாக்கி, ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்தினார். இதிலும் ஆத்திரம் தீராத பிரமோத், தனது மகனை அழைத்து அப்பெண்ணின் வாயில் சிறுநீர் கழிக்க வைத்தார்.

    அங்கிருந்து எப்படியோ தப்பித்த அப்பெண் தனது உறவினர்களிடன் நடந்ததை கூறினார். இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.

    அந்த பெண்மணியை உடனடியாக மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர்.

    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை தேடும் வேட்டை நடைபெறுவதாகவும் காவல்நிலைய அதிகாரி சியாராம் யாதவ் கூறினார்.

    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது.

    வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர். சந்திர சேகர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாட்னா நீதிமன்றத்தின் ஆர்டர் வீடியோவின் தொடர்ச்சியாக 16.06.2023 தேதியிட்ட மெமோ எண்.-8534/L, மாவட்டத்தில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.

    எனவே, நான், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 144ன் கீழ், பாட்னா மாவட்டத்தில் உள்ள 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின்(முன்பள்ளி மற்றும் அங்கன்வாரி மையங்கள் உட்பட) கல்வி நடவடிக்கைகளை 28.06.2023 வரை தடை செய்கிறேன்.

    மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவு 26.06.2023 மற்றும் 28.06.2023 வரை அமலில் இருக்கும். 24.06.2023 அன்று எனது கையொப்பம் மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.
    • திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்.

    திருப்பூர் :

    ேஹாலி பண்டிகை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் திரும்ப தொடங்கி உள்ளனர். இவர்களின் தொடர் வருகையால், பின்னலாடை தொழிலில் தொழிலாளர் தட்டுப்பாடு சீராகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.கடந்த 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட ஒரு வாரம் முன்னரே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.

    இது ஒருபுறமிருக்க வடமாநிலத்தவர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. வீடியோ பரப்பியவர்களை கைது செய்து போலீசார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தமிழகம் பாதுகாப்பான நகரம், திருப்பூர் உங்களை பிழைக்க வைக்கும் ஊர் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பண்டிகை நிறைவு பெற்று ஒரு வாரம் முதல் 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.

    திருப்பூர் ரெயில் நிலைய முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநில ெரயில்களில், பொதுப்பெட்டியில் பயணிப்பவரே அதிகம். கடந்து 10 நாட்களில், 12 ஆயிரம் பேர் வரை ெரயில் மூலம் திருப்பூர் வந்தனர். ேஹாலி முடிந்தாலும் கூட வடமாநிலத்தவர் சொந்த மாநிலம் பயணிப்பதும் தொடர்கிறது. தினமும் 4 ஆயிரம் பேர் செல்கின்றனர். அங்கு சென்று குடும்பத்தினர் உறவினர்களை பார்த்து விட்டு இவர்களும் ஒரு மாதத்துக்குள் திருப்பூர் திரும்புவர் என்றனர்.

    ெரயில்களில் வந்திறங்குபவர்களுக்கு உடனே வேலை தர நிறுவனங்கள் பல விசிட்டிங் கார்டுகளுடன் காத்திருக்கின்றன. தங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இந்தி தெரிந்த, வடமாநில தொழிலாளர்களை தேர்வு செய்து அவர்களை அழைத்து வந்து ெரயில் நிலையத்தில் நிறுத்தி விடுகின்றனர். ெரயிலை விட்டு இறங்குபவர்களை அழைத்து ஈர்க்கும் வகையில் பேசும் இவர்கள் வேலை, சம்பளம், தங்குமிடம் தருகிறோம் என அழைத்து சென்று விடுகின்றனர்.

    இதனிடையே பீகார் தொழிலாளர்கள் திருப்பூர் வருகையையொட்டி பாட்னா ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் கேரளா எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ் 3-ம் நாளில் பாட்னா செல்கிறது.இதில் இதுவரை 24 பெட்டிகள் இருந்தது.

    என்ஜினை அடுத்துள்ள இரண்டு பெட்டி, ெரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் என மொத்தம் நான்கு பெட்டிகள் பொது பெட்டிகளாக உள்ளது. பீகார் மாநிலத்தவர் தொடர் வருகையால் இந்த ெரயிலுக்கான பயணிகள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் வருகிற 27-ந் தேதி முதல் ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரெயில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் போதும் (30-ந் தேதி முதல்) ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக காப்பக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். #BiharShelter
    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வருவது ஆஸ்ரா பெண்கள் காப்பகம். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த காப்பகத்தில் சுமார் 17 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தகவலறிந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அதிக காய்ச்சல் காரணமாக இரு பெண்களும் பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காப்பகம் நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியது தெரிய வந்தது.

    இரு பெண்கள் இறந்தது தொடர்பாக காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே, முசாபர்பூர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவி பெற்று நடத்தப்படும் காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    பீகார் மாநிலத்தில் நாட்டையே உலுக்கிய காப்பகத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு காப்பகத்தில் 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். #AasraShelterHome #Bihar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் முசாபர்ப்பூர் எனும் பகுதியில் இயங்கி வந்த சிறுமியர் காப்பகத்தில் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முழுவதும் பாதிக்கப்பட்டது சிறுமிகள் என்பதும் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் நேபாளி நகர் எனும் பகுதியில் இயங்கிவரும் ஆஸ்ரா பெண்கள் காப்பகத்தில் இருந்து 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக அந்த பெண்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போதே அவர்கள் உயிரிழந்ததாகவும் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால், அந்த 2 பெண்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே மரணம் அடைந்து இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

    முன்னதாக இந்த காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோடியதாகவும், காப்பகத்தின் அருகில் இருப்பவரின் தொந்தரவு காரணமாக அவர்கள் தப்பியோடியதாகவும் காப்பகம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. #AasraShelterHome #Bihar
    மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு ஜாமீன் பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
    ×