சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி பீகார் சென்றுள்ளார்.பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி
Published on

பாட்னா:

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பீகார் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com