search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தனியார் பள்ளி கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் - பள்ளிக்கு தீவைத்த ஊர் மக்கள்
    X

    தனியார் பள்ளி கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் - பள்ளிக்கு தீவைத்த ஊர் மக்கள்

    • பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுவன் வீட்டுக்கு வராத நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

    இன்று காலை சிறுவன் படித்து வந்த தனியார் பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு பள்ளியில் உள்ளவர்கள் மழுப்பலாக பதிலளித்து அவரைகளை உள்ளே விட மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

    அப்போது பள்ளியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிறுவனின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கும்பலைக் கட்டுப்படுத்தி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முற்றக்கட்டமாக சிறுவன் பள்ளிக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.

    எனவே சிறுவனைக் கொன்று சடலத்தை மறைத்து வைத்ததாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ரப்பர் டயர்களுக்கும் பள்ளியின் சுவர்களுக்கும் தீ வைத்து போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    Next Story
    ×