search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Prakashraj"

  • அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
  • தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

  கொடைக்கானல்:

  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமிண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

  மேலும் இதேபகுதியில் நடிகர் பாபிசிம்ஹா அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கொடைக்கானலில் ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

  இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், நிலஅளவையர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாபிசிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினரும் ஈடுபட்டனர். அளவீடு செய்யப்பட்ட அறிக்கையை திண்டுக்கல் கோட்டாட்சியர் ராஜாவிடம் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் தெரிவிக்கையில், கொடைக்கானலில் 2400 சதுரடிக்குமேல் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

  இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. வனத்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை. பாபிசிம்ஹா தனது தாயார் பெயரில் உள்ள இடத்தை புதுப்பித்து வீடு கட்டி வருகிறார். ஆனால் அதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என தெரியவில்லை.

  2 பேரிடமும் நோட்டீஸ் அளித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

  • காஞ்சிவரம், இருவர், மேஜர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரகாஷ்ராஜ் தனி கவனம் பெற்றார்.
  • தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரகாஷ்ராஜ் சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

  தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்து வருகின்றன. இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ''ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரில்லு, ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில்.

  பிரகாஷ்ராஜ்

  பிரகாஷ்ராஜ்

  அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்ஷியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு எனக்கு பிடித்த படங்களுக்கு குறைத்த சம்பளம் வாங்கிக் கொள்வேன்.நம்மை சுற்றி மாறிக்கொண்டு இருக்கும் உலகத்தை சினிமாவில் காட்ட முடியாமல்தான் பெரிய நடிகர்கள் படங்கள் கூட தியேட்டரைவிட்டு போய் விடுகின்றன.

  பிரகாஷ்ராஜ்

  பிரகாஷ்ராஜ்

  சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில், ய்ஷ், சாய் பல்லவி போன்றோருடன் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள நடிகர்கள் கூட போட்டியிட வேண்டி இருக்கிறது. நட்சத்திர அந்தஸ்துக்கான அர்த்தம் தற்போது மாறிவிட்டது. வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் பாராட்டை பெறுபவர் தான் நிற்க முடியும். மக்களிடையே சினிமாவைப் பற்றிய நல்ல புரிதல் உள்ளது" என்றார்.

  ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘சேலஞ்ஜ்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இந்த ஆண்டின் இந்திய அழகி பட்டத்தை வென்ற அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். #Challenge #Prashanth #AnuKeerthyVas
  ஜானி படத்தை அடுத்து நடிகர் தியாகராஜனின் ஸ்டார் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு, ‘சேலஞ்ஜ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில், பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்த ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனு கிரீத்திவாஸ் நடிக்கிறார். இவர், திருச்சியை சேர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, மாரிமுத்து, ஹரிஸ் உத்தமன், உமாபத்மநாபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  பிரஷாந்த் நடித்த ‘சாக்லெட்’ படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ், இந்த படத்தின் இயக்குகிறார். மனோகரன்-ஷங்கர் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். இந்தி பட உலகின் முன்னணி இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்ஜி, இசையமைக்க, வேல்ராஜிடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்த ஷிவக்குமார், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

  பிரஷாந்தின் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. சென்னை, தென்காசி, தூத்துக்குடி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. ‘‘முன்பின் தெரியாத கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையேயான மோதலில், இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். வெற்றி யாருக்கு? என்பதே ‘சேலஞ்ஜ்’ படத்தின் கதை’’ என்கிறார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ். #Challenge #Prashanth #AnuKeerthyVas

  ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவ்' படத்தின் விமர்சனம். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
  கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.

  இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.  சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார். 

  ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

  நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு அபாரம். கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்ககேற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.  விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் காட்சிக்கு ஏற்பவும் வந்து செல்கின்றனர்.

  என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநருக்கு பாராட்டுக்கள். வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் என காட்சிகள் ரசிக்கும்படியாகவே உள்ளது. திரைக்கதையின் நீளத்தை மட்டும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.   ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை அபாரம், பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களை உணர முடிகிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கே பலமாக அமைந்துள்ளது.

  மொத்தத்தில் `தேவ்' காதலன். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

  ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் முன்னோட்டம். #Dev #Karthi #RakulPreetSingh
  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் `தேவ்'.

  கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, விக்னேஷ்காந்த், அமுதா ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

  ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு - ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன், ஸ்டண்ட் - அன்பறிவ், கலை இயக்குனர் - ராஜீவன், பாடல்கள் - தாமரை, விவேக், ரஜத், நடனம் - தினேஷ், ஷோபி, உடை வடிவமைப்பு - நீராஜா கோனா, நிர்வாக தயாரிப்பு - கே.வி.துரை, தயாரிப்பு - எஸ்.லக்‌ஷ்மன் குமார், எழுத்து, இயக்கம் - ரஜத் ரவிஷங்கர்.  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி பேசும்போது,

  இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். 

  தேவ் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

  தேவ் டிரைலர்:

  மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். #Prakashraj #pmmodi #parliamentelection #rajinikanth

  பெங்களூரு:

  பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

  திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் பேசுகிறார். இது தவிர 8 ஆட்டோக்களில் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரமும் செய்கிறார்.

  கட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். மேலும் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.

  இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

  நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.


  பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் எனக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். தனி மனிதனாக குரல் கொடுத்த எனக்கு ஆதரவு அளிப்பதோடு, மோடிக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  அந்தந்த மாநில பிரதிநிதிகள்தான் எம்.பி.யாகி பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய கருத்து. இதனால்தான் நான் பெங்களூருவில் போட்டியிடுகிறேன்.

  ரஜினிகாந்த் ஒருநேரம் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்தை கூறுகிறார். இன்னொரு நேரம் அதற்கு எதிரான கருத்தை கூறுகிறார். அவர் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Prakashraj #pmmodi #parliamentelection #rajinikanth 

  ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரகுல், கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார். #Dev #Karthi #RakulPreetSingh
  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `தேவ்'.

  ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், வேல்ராஜ், கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும் போது,

  இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.  ரகுல் ப்ரீத் சிங் பேசும் போது,

  இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.

  கார்த்தியுடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். #Dev #DevPressMeet #Karthi #RakulPreetSingh #RajathRaviSankar

  ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Dev #Karthi #RakulPreetSingh
  `கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

  அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமான இதில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார். ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். #Dev #Karthi #RakulPreetSingh #DevonFeb14 
  நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாருக்கு, நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
  நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்னணி நடிகரான அர்ஜூன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள இந்த சம்பவம், சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

  அர்ஜூன் மூத்த நடிகர் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால் பாலியல் புகார் கூறியுள்ள அந்த பெண், இவ்வளவு நாட்கள் தனக்கு ஏற்பட்ட அவமானம், காயத்தை, தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. தன் மீதான பாலியல் புகாரை அர்ஜூன் புறம்தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவரது பெருந்தன்மையை காட்டும்.  பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ‘மீ டூ’ இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அடுத்து வரும் காலத்தில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டட்டும்.

  இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja #Prakashraj

  ரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் தேவ் படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட ரகுல் ப்ரீத் சிங்குக்கு, பிறந்தநாளுக்கு முன்னதாகவே கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது. #Dev #RakulPreetSingh
  ரகுல் பிரீத் சிங் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தான் அவரை முன்னணி கதாநாயகியாக வளர்த்தது. மீண்டும் தமிழுக்கு வந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு தேவ் படத்திலும் ஜோடியாகி இருக்கிறார்.

  சென்னை, ஐதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். பொருட்சேதமும் ஏற்பட்டது.

  இதனால் தேவ் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதுடன் படக்குழுவினரும் அங்கிருந்து வர சிரமப்பட்டனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரகுல் பிரீத் சிங்கின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.

  முக்கிய நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்பை முடித்தால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அவர்களை வழியனுப்பி வைப்பது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
  அதோடு வரும் அக்டோபர் 10-ம் தேதி ரகுல் பிறந்தநாள் வருவதால் முன்கூட்டியே அதையும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 21-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. #Dev #RakulPreetSingh #Karthi