என் மலர்
நீங்கள் தேடியது "Karthick"
- அசோக் செல்வன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு ரா.கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் திரைப்படம்.
- ரா.கார்த்திக் அடுத்ததாக நாகர்ஜுனா நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்
அசோக் செல்வன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு ரா.கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் திரைப்படம். இப்படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடன் ரிது வர்மா, அபர்னா பாலமுரளி மற்றும் அஷிவாத்மிகா ராஜசேகர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது.
இந்நிலையில் ரா.கார்த்திக் அடுத்ததாக நாகர்ஜுனா நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது அவர் நடிக்கும் 100- வது திரைப்படமாகும். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாகர்ஜுனா நடிப்பில் வெளியான நா சாமி ரங்கா திரைப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் நாகர்ஜுனா கூலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா.
- நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திகை திருமண செய்துக் கொண்டார்
நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகை அபிநயா அவரது நீண்ட நாள் காதலனான கார்த்திகை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த மாதம் புகைப்படத்துடன் வெளியிட்டு அறிவித்தார்.

இந்நிலையில் இன்று அவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அபிநயா அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். திரைப்பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
நடிகை அபிநயா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





#Dev censored with a U certificate. All set to release on Valentine’s Day! #DevonFeb14pic.twitter.com/idjLQOQ5Ym
— Actor Karthi (@Karthi_Offl) January 28, 2019






