search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rakul Preet Singh"

    • தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங்.
    • இவர் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ், சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



    இந்நிலையில் காதல் குறித்த கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, காதல் அளவற்ற ஒன்று, அதை உங்களால் விவரிக்க முடியாது. நீங்கள் காதலிக்கும் நபருடன் இருக்கும்போது, நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். காதல் என்பது ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கக் கூடிய ஒன்று, இது ஒரு தோழமை, இருவரும் ஒருவருக்கொருவர் உதவி இருவரின் கனவுகளையும் எட்ட வேண்டும் என்று கூறினார்.

    • எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.
    • ஒவ்வொரு வாரமும் என்னைப்பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

    தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் மூலம் பிரபலமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங், தனது திருமணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, "எனது திருமணம் குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் பேசுகிறார்கள். எப்போது திருமணம் நடந்தது என்று யாரேனும் சொல்ல முடியுமா? ஒவ்வொரு வாரமும் என்னைப்பற்றி புதிது புதிதாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கூகுள் அலர்ட்ஸ் மூலம் அவை எனக்கு வந்து சேருகின்றன.

    கடந்த ஆண்டு நவம்பரில் என் திருமணம் நடந்து விட்டதாக தகவல் பரப்பினார்கள். அது எப்படி நடந்தது என்று அவர்களையே கேட்கவேண்டும் என நினைக்கிறேன். எதுவும் உண்மை இல்லை" என்றார். இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக ரகுல் பிரீத் சிங் கடந்த 2021-ல் அறிவித்தார். அப்போது இருந்தே இவர்கள் திருமணம் குறித்த தகவல் வலைத்தளத்தில் வந்துகொண்டே இருக்கிறது. தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்கள் ரகுல் பிரீத் சிங் கைவசம் உள்ளன.

    • தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே படங்களில் நடித்த் பிரபலமடைந்தவர் ரகுல்பிரீத் சிங்.
    • தற்போது தனது காதல் குறித்து நடிகை ரகுல்பிரீத் சிங் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    தமிழில் தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார். ரகுல்பிரீத் சிங் சமீபத்தில் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதாக பகிரங்கப்படுத்தினார்.

     

    ரகுல்பிரீத் சிங்

    ரகுல்பிரீத் சிங்

    தற்போது காதல் உறவு குறித்து ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ''சிலர் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக பேசாமல் இருப்பது ஒருவித மனநிலை. ஆனால் நான் அப்படி இல்லை. காதலை வெளிப்படுத்தினேன். எனது வாழ்க்கையை இரட்டை வழியில் கொண்டு செல்ல விரும்பவில்லை. கேமரா முன் நடிக்கும்போது நிஜவாழ்க்கையில் நடிக்க தேவை இல்லை. நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

     

    ரகுல்பிரீத் சிங்

    ரகுல்பிரீத் சிங்

    எல்லோருக்கும் வாழ்க்கையில் துணை முக்கியம். நானும், ஜாக்கியும் எங்கள் உறவில் இயல்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறோம். இது பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். வாழ்க்கை மிகவும் எளிமையானது. பயத்தின் காரணமாக சில விஷயங்களை மறைத்து சிக்கலாக்குகின்றனர். எனக்கு பயம் இல்லாததால் காதலை மறைக்கவில்லை" என்றார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
    • இவர் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத்திசிங். 'தடையற தாக்க' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து 'தேவ்' படத்தில் நடித்தவர், சூர்யாவுடன் 'என்.ஜி.கே' படத்திலும் நடித்தார்.


    ரகுல் ப்ரீத் சிங்

    தற்போது இவர் இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கருத்துக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.
    • இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

    இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.


    இந்தியன் 2

    பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


    ரகுல் ப்ரீத் சிங்

    இந்நிலையில், 'இந்தியன்-2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளதாகவும் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் விமர்சனம்.
    சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.

    இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.



    இவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? அவரது ஆசை நிறைவேறியதா? முழு அரசியல்வாதி ஆனாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.



    அரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

    இயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை. 



    பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.



    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் இன்று ரிலீசாகும் நிலையில், அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருப்பதாக சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் என்ஜிகே படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏 இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



    இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்ஜிகே படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், தனது வழக்கமான படங்கள் போல் இல்லாமல் என்ஜிகே வித்தியாசமாக இருக்கும் என்றார்.
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்த என்.ஜி.கே. படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறித்து செல்வராகவன் அளித்த பேட்டி வருமாறு:-

    “நடுத்தர குடும்பத்து இளைஞன் அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் கதை. நான் சூர்யா ரசிகன் என்பதால் அவரை நடிக்க வைத்தேன். எங்கள் இருவரின் கலவையாக இந்த படம் இருக்கும். எனது வழக்கமான படங்களை விட வித்தியாசமான கதையில் உருவாக்கி உள்ளேன்.



    எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தும் படத்தில் இருக்கும். சாய் பல்லவியும், ரகுல் பிரீத்சிங்கும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சாய் பல்லவியின் பிரேமம் மலையாள படம் பார்த்து வியந்தேன். படப்பிடிப்பில் நான் கண்டிப்பாக இருப்பதாக பேசுகிறார்கள். மற்ற இயக்குனர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் சில கட்டுப்பாடுகள் வைத்து படப்பிடிப்பை நடத்துகிறேன்” என்றார்.

    ரகுல் ப்ரீத் சிங் சிங் நடிப்பில் சூர்யாவின் என்ஜிகே படம் ரிலீசாகவிருக்கும் நிலையில், நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதாகவும், கவர்ச்சியாக நடிக்க தயார் என்றும் ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத்திசிங். ‘தடையற தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து ‘தேவ்’ படத்தில் நடித்தவர், தற்போது சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வருகிற 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் ரகுல் இந்தியில் டெ டெ பியார் டெ என்ற படத்தில் அதிக கவர்ச்சியில் நடித்தார். 

    இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ’நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடன் படம் பண்ணுகிறேன். எப்போதுமே முழுக் கதையையும் கேட்பேன். அதில் என் கதாபாத்திரம் எந்த அளவுக்கு அழுத்தமாக இருக்கிறது என்று பார்ப்பேன்.



    எனக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த படத்தில் கமிட் ஆகமாட்டேன். இந்தியில் நான் நடிச்ச `டெ டெ பியார் டெ’யில் கவர்ச்சி வேடம் பண்ணியிருக்கேன். காரணம், அந்த படத்துல எனக்கு முக்கியத்துவம் அதிகம். மொத்தம் மூணு கேரக்டர்களைச் சுத்திதான் படம் நகரும். தவிர, அது ஒரு சூப்பர் கேரக்டர். கிளாமர் இருக்கோ இல்லையோ... நல்ல கதைகள்தான் என் சாய்ஸ்’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். 

    கவர்ச்சிக்கு தயார் என்று கூறியதோடு படுகவர்ச்சியான படம் ஒன்றையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படத்தின் முன்னோட்டம்.
    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `என்ஜிகே'.

    சூர்யா நாயகனாகவும், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாகவும், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, உமாதேவி, ஒலி வடிவமைப்பு - ஹரிஹர சுதன், கலை இயக்கம் - ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, பெருமாள் செல்வம், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஸ்டன்னர் சாம், தயாரிப்பு - எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, எழுத்து, இயக்கம் - செல்வராகவன்.



    படம் பற்றி நடிகை சாய் பல்லவி கூறியதாவது,

    படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார் என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    என்ஜிகே டிரைலர்:

    செல்வராகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் என்ஜிகே படத்தில் நடித்த அனுபவம் குறித்து விளக்கிய சாய் பல்லவி, சூர்யா சார் நிறைய டேக் வாங்கி நடிப்பதாக கூறிய பிறகு தான் சற்று ஆறுதலாக இருந்ததாக கூறினார்.
    முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன்.

    படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்.



    நடிப்பு என்றால் என்ன? என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை, நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா? என்று செல்வராகவனிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை, நான் கேட்டது கிடைத்துவிட்டது என்று கூறினார்.

    பிறகு சூர்யா சாரிடம் கேட்டபோது, நானும் நிறைய ‘டேக்’ வாங்கித்தான் நடிக்கிறேன் என்றார் சூர்யா சார். அதன்பிறகு தான் சிறிது ஆறுதலாக இருந்தது.

    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே' படம் வருகிற மே 31-ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞராக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


    சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த அரசியலும், பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு ட்விட்டர் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளளது.


    படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான உரிமையை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் கைப்பற்றியிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

    ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

    ×