காதல் அளவற்ற ஒன்று, உங்களால் விவரிக்க முடியாது.. ரகுல் ப்ரீத் சிங் கருத்து

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங்.இவர் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
காதல் அளவற்ற ஒன்று, உங்களால் விவரிக்க முடியாது.. ரகுல் ப்ரீத் சிங் கருத்து
Published on

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ், சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் காதல் குறித்த கேள்விக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, காதல் அளவற்ற ஒன்று, அதை உங்களால் விவரிக்க முடியாது. நீங்கள் காதலிக்கும் நபருடன் இருக்கும்போது, நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். காதல் என்பது ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கக் கூடிய ஒன்று, இது ஒரு தோழமை, இருவரும் ஒருவருக்கொருவர் உதவி இருவரின் கனவுகளையும் எட்ட வேண்டும் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com