'இந்தியன்-2' படப்பிடிப்பில் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்
Published on

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.

இந்தியன் 2

பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

இந்நிலையில், 'இந்தியன்-2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளதாகவும் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com