பட்டாசுக்கு கொடுக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.. ரகுல் பிரீத் சிங்கை சாடிய ரசிகர்கள்

சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார்.பட்டாசு வெடிக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் என எனது தந்தை கூறினார்.
பட்டாசுக்கு கொடுக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.. ரகுல் பிரீத் சிங்கை சாடிய ரசிகர்கள்
Published on

தமிழில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்து இருந்தார்.

அவர் கூறும்போது 'சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லது இனிப்பு சாக்லெட் வாங்கலாம் என்றார். அவர் சொன்னது சரி என்று தோன்றியது. அன்று முதல் இன்று வரை நான் பட்டாசு வெடித்ததே இல்லை'' என்றார்.

இந்த பேச்சு வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் ரகுல் பிரீத் சிங்கை சாடி வசைபாடி வருகிறார்கள்.

விலை உயர்ந்த ஆடை அணிகிறீர்களே, சாதாரண உடை அணிந்து பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்வீர்களா? நீங்கள் விலை உயர்ந்த உணவு சாப்பிடாமல் சாதாரண உணவை சாப்பிடலாம் இல்லையா? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தும், அவதூறு செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com