நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்?

அசோக் செல்வன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு ரா.கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் திரைப்படம். ரா.கார்த்திக் அடுத்ததாக நாகர்ஜுனா நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்
நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர்?
Published on

அசோக் செல்வன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு ரா.கார்த்திக் இயக்கத்தில் நித்தம் ஒரு வானம் திரைப்படம். இப்படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடன் ரிது வர்மா, அபர்னா பாலமுரளி மற்றும் அஷிவாத்மிகா ராஜசேகர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது.

இந்நிலையில் ரா.கார்த்திக் அடுத்ததாக நாகர்ஜுனா நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது அவர் நடிக்கும் 100- வது திரைப்படமாகும். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாகர்ஜுனா நடிப்பில் வெளியான நா சாமி ரங்கா திரைப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் நாகர்ஜுனா கூலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com