என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Law College"
- பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹர்ஷ் ராஜ் என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
- தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பிகார் தலைநகர் பாட்னாவில் சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்து மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (மே 27) பாட்னா சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த கருப்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கு படித்து வந்த ஹர்ஷ் ராஜ் (22) என்ற இளைஞனை கட்டையால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹர்ஸ் ராஜை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், கல்லூரியில் உள்ள சிசிடிவி கட்சிகளைக் கைப்பற்றி ஆராய்ந்ததில் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர்.
இன்று (மே 28) இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அதே கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் சந்தன் யாதவ் என்ற மாணவனை கைது செய்த்துள்ளனர். அவரின் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு கல்லூரியில் தாண்டியா நடன நிகழ்வில் ஹர்ஷ ராஜ் குழுவுக்கும் சந்தன் யாதவ் குழுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதிலிருந்து சின்ன சின்ன உரசாலாக இரு குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையே பூதாகாரமாக மாறி மாணவனின் உயிரைப் பறித்தது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஹர்ஷ் ராஜின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் போரட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநிலத் தலைநகர் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் வைத்தே மாணவன் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
- கூட்டத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- வக்கீல் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
நெல்லை:
தமிழ்நாடு சமரச மையத்தின் உத்தரவின் பேரில் நெல்லை அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் மீடியேட்டர்களுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம் நெல்லை மாவட்ட சமரச மையம் மூலமாக அரசு சட்டக்கல்லூரியில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரசமையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார். இதில் சென்னை உயர்நீதிமன்ற சமரச மையத்தின் மூத்த பயிற்சியாளர் வக்கீல் அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, வள்ளியூர், நாங்குநேரி, சிவகிரி, ஆலங்குளம், செங்கோட்டை, ராதாபுரம் ஆகிய 9 தாலுகாவின் வக்கீல் சங்க தலைவர் மற்றும் செயலாளர்கள், வக்கீல்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லைமாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.
- நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
- சட்டக் கல்லூரி மாணவிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
நெல்லை:
நெல்லை அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
சட்டக் கல்லூரி முன்பு தொடங்கிய இந்த பேரணி கோர்ட்டு வளாகம் வரை சென்றது. பேரணியை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மாரி ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சட்டக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லதா சிறப்புரை ஆற்றினார். பேரணியில் சட்டக் கல்லூரி மாணவிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இதில் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் சண்முக சுந்தரம், நாராயணி, முத்துக்குமார், ராம்குமார், சண்முக சுந்தர குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது.
- போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது என விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரிகாரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதை அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார்.
இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அன்று நான் டெல்லியிலிருந்து சிவகங்கையை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்று சிவகங்கையில் இருந்து கொண்டு டெல்லியையும் பார்க்கிறார். சிவகங்கையையும் பார்க்கிறார். சிவகங்கை மண்ணுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற பணியாற்றி வருவது, அவரை விட நாங்கள் இன்னும் உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. காரைக்குடிக்கு சட்டக்கல்லூரி வந்திருப்பதற்கு முழு காரணம் ப.சிதம்பரம்தான்.
என்னுடைய மாவட்டத்திற்கு கொண்டு வர முடியாவிட்டாலும் பக்கத்து மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும் என்றால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். மதிப்பெண்கள்தான் மதிப்பை உயர்த்தும். இல்லையென்றால் பெற்றோரின் பர்சுதான் காலியாகும். அரசு கல்லூரியில் 10 ஆயிரம் ரூபாயில் படிப்பை முடித்து சென்று விடலாம். ஸ்காலர்ஷிப் இருந்தால் அந்த பணமும் திரும்ப கிடைத்து விடும். தனியார் கல்லூரியில் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிவரும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பு சட்ட படிப்பு என்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சட்டக்கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது.
பொறியியல், மருத்துவ படிப்புக்கு இணையாக சட்ட படிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, என்றார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15-வது அரசு சட்டக்கல்லூரியான இதில் 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு முதல் கவுன்சிலிங் முடிந்து முதல் கட்டமாக 22 மாணவர்கள் குறிப்பாக சிவகங்கை, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இன்று சேர்ந்துள்ளனர்.
போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது. சட்ட கல்வி பயின்ற பெண்கள் அதிக அளவில் நீதிபதிகளாக உள்ளனர். இதுபோன்று இன்னும் புதிதாக பல்வேறு கல்லூரிகள் இந்த ஆட்சியில் தொடங்கப்பட வேண்டும்.
விரைவில் கட்டிடப் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க விரும்புகிறேன் என்றார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோரும் பேசினர்.
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மற்றும்
உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் வணிக கழகத்தினர், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தி.மு.க.- காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரின் தனி அலுவலர் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்