search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students awareness"

    • நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
    • சட்டக் கல்லூரி மாணவிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின.

    சட்டக் கல்லூரி முன்பு தொடங்கிய இந்த பேரணி கோர்ட்டு வளாகம் வரை சென்றது. பேரணியை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மாரி ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சட்டக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லதா சிறப்புரை ஆற்றினார். பேரணியில் சட்டக் கல்லூரி மாணவிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    இதில் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் சண்முக சுந்தரம், நாராயணி, முத்துக்குமார், ராம்குமார், சண்முக சுந்தர குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×