என் மலர்
இந்தியா

மோன்தா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
- மோன்தா புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் ஆந்திர பிரதேச மாநிலம் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் (காகிநாடா) இடையே நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகுிறது.
ஆப்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. ஆந்திர மாநில கடையோர பகுதிகள் இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியுள்ளார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்ததாகவும், பிரதமர் அலுவலகத்துடன் தொழில்நுட்ப அமைச்சர் நர லோகேஷ் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
அப்போது எங்கெல்லாம் மழை பெய்யும், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பயிர்கள் சேதமடைவதை தடுக்க கால்வாய்கள், குளங்கள், ஏரிகளின் கரையோரங்களை வலுப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் புயலின் நிலை குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணா மாவட்டத்தில் இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், குண்டூர், பபட்லா, என்டிஆர், பல்நாடு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






