search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra CM"

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல் மந்திரி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.
    • இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்தினார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன்மோகன் காயமடைந்தார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அருகிலிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல் மந்திரி அருகிலிருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர முதல் மந்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு புதுடெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய பிரமாண்ட மாநாடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    சந்திரபாபு நாயுடு பங்கேற்ற அம்மாநாட்டில் சில கட்சிகள் ராகுல் காந்தி தலைமையை ஏற்க தயாராக இல்லை என்று கூறி வருகின்றன. இது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

    மேலும் சந்திரபாபுநாயுடு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும் சந்தித்தார். அப்போது அமராவதியில் ஐகோர்ட்டு கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். #ChandrababuNaidu #RahulGandhi


    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #AndhraCM #JaganMohanReddy
    நகரி:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    அம்மாநில சட்டசபை காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து சந்திரசேகரரராவ் ஆட்சியை கலைத்து கடிதம் கொடுத்தார்.

    வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஆந்திராவிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா, ஆந்திரா சட்டசபை தேர்தலில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்று ஆங்கில டி.வி. சேனல் இந்தியா டூடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

    10 ஆயிரத்து 650 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தெலுங்கானாவில் மீண்டும் சந்திர சேகரராவ் முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்சமார் ரெட்டிக்கு 18 சதவீதம் பேரும், பா.ஜனதா தலைவர் கி‌ஷன்ரெட்டிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய பேராசிரியர் கோதண்டராமுவுக்கும் 6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.


    இதன் மூலம் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு 5 சதவீத ஆதரவே உள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

    இதனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி மீது 35 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகாவில் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிக்கு 55 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 42 சதவீத பேரும் ஆதரவு அளித்துள்ளனர். #AndhraCM #JaganMohanReddy
    ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்து தென்னிந்திய கட்சிகள் ஒன்றிணைவது குறித்து ஆலோசனை நடத்தினார். #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கனகதுர்கா ஆலையத்துக்கு வழிபட வந்த கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமியை ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், தென்னிந்திய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக இணைவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து, இதுதொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ×