என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திரா முன்னாள் முதல்வர்"
- ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார்.
- சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர் செலி சிங்கையா என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூரு கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டபல்லா கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தொண்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக பயணித்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரது கான்வாயைப் பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில், செலி சிங்கையா மலர்கள் தூவ முயன்றபோது தவறி விழுந்து, ஜெகனின் காரின் முன் வலது சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.
முதலில், விபத்து ஜெகனின் கான்வாயில் உள்ள மற்றொரு வாகனத்தால் நடந்ததாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், ஜெகன் பயணித்த வாகனமே சிங்கையாவை மோதியது உறுதியானது.
விபத்துக்குப் பிறகு, சிங்கையாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள், சிங்கையாவின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி (வயது 68). இவர் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
விவேகானந்தரெட்டி கடந்த 1989 மற்றும் 94-ம் ஆண்டில் புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக பணிபுரிந்துள்ளார்.
இவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். விவேகானந்த ரெட்டி அரசியல் சம்பந்தமான விஷயங்களுக்காக கடப்பா வந்து தங்கி செல்வார்.
2 முறை கடப்பா எம்.பி.யாவும் பணிபுரிந்த விவேகானந்தரெட்டி தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் கட்சி பணிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான புலிவெந்துலா வந்த விவேகானந்தரெட்டி இரவு பொதட்டூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை விவேகானந்தரெட்டி தனது வீட்டு கழிவறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விவேகானந்தரெட்டியின் உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி புலிவெந்துலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் விவேகானந்த ரெட்டி கழிவறையில் தலை மற்றும் காலில் வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விவேகானந்தரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவேகானந்தரெட்டி உடலில் 7 இடங்களில் சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அவரை கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க கடப்பா போலீசார் 5 சிறப்பு படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
விவேகானந்த ரெட்டியின் உறவினர்கள், வீட்டு வேலைக்காரர்களிடம் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். #VivekanandaReddy
ஆந்திரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் தம்பி ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி. இவர் 2 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். ஒரு முறை எம்.பி.யாகவும், ஒரு முறை எம்.எல்.சி.யாகவும், விவசாயத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஐதராபாத்தில் கடந்த 4 நாட்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வந்தது. வேட்பாளர் தேர்வு நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியும் பங்கேற்றார்.
நேற்று காலை விவேகானந்த ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவுக்கு திரும்பினார். அங்குள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக தங்கி இருந்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலையில் வீட்டுக்கு வேலைக்காரர்கள் வந்தனர். அப்போது விவேகானந்த ரெட்டி இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவேகானந்த ரெட்டி இயற்கையாக மரணம் அடைந்துவிட்டதாக தகவல் பரவியது.
இதற்கிடையே அவரது உடலை பார்த்த போது தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனால் சிறிது நேரத்தில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக அவரது உதவியாளர் கிருஷ்ண ரெட்டி புலிவேந்துலா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் விவேகானந்த ரெட்டி தலையில் காயம் இருப்பதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்த ரெட்டி உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். விவேகானந்த ரெட்டி இறந்த தகவல் அறிந்ததும் ஜெகன்மோகன் ரெட்டி அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் புலிவேந்துலா விரைந்துள்ளனர்.






