search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chandra sekhar rao"

    நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் பிரதமர் மோடி ஓட்டுக்காக பொய் பேசுவதா? என தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். #KCR #KCRhitsModi #Modi #Telanganapolls
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா  4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக இன்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.


    சில நாட்களுக்கு முன்னர் இங்கு முதல்கட்ட பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி,  நிஜாமாபாத் நகரை லண்டன் நகருக்கு இணையாக மாற்றிக் காட்டுவேன் என்று உங்கள் முதல் மந்திரி தெரிவித்திருந்தார், ஆனால், இந்த பகுதிக்கு தேவையான குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

    நிஜாமாபாத் பகுதி பாராளுமன்ற உறுப்பினராக முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மெஹபூப்நகர் பகுதியில் இன்று நடைபெற்ற தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பங்கேற்று பேசினார்.

    நாங்கள் ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இதுபோல் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் எந்தவொரு மாநிலத்திலாவது வழங்கப்பட்டுள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தெலுங்கானா மாநில அரசு முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானாவில் மின்சாரப் பற்றாக்குறை என்பதே இல்லை. ஆனால், மோடி அவர்களே.., தெலுங்கானாவில் மின்சாரம் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவைப்போல் நான் யாருக்கும் பயந்தவனல்ல. ஒரு முதல் மந்திரிக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை நீங்கள் சுமத்த முடியாது. இப்படிப்பட்ட பொய்யை நீங்கள் எப்படி சொல்லலாம்?

    பொறுப்புள்ள பிரதமர் பதவியில் இருக்கும் நீங்கள் ஓட்டுக்காக இப்படி பொய் சொல்ல கூடாது என்றும்  அவர் குறிப்பிட்டார். #KCR #KCRhitsModi #Modi #Telanganapolls
    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #AndhraCM #JaganMohanReddy
    நகரி:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    அம்மாநில சட்டசபை காலம் முடிய இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து சந்திரசேகரரராவ் ஆட்சியை கலைத்து கடிதம் கொடுத்தார்.

    வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஆந்திராவிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா, ஆந்திரா சட்டசபை தேர்தலில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்று ஆங்கில டி.வி. சேனல் இந்தியா டூடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

    10 ஆயிரத்து 650 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தெலுங்கானாவில் மீண்டும் சந்திர சேகரராவ் முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம்சமார் ரெட்டிக்கு 18 சதவீதம் பேரும், பா.ஜனதா தலைவர் கி‌ஷன்ரெட்டிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்துக்காக போராடிய பேராசிரியர் கோதண்டராமுவுக்கும் 6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.


    இதன் மூலம் தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக 43 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 38 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு 5 சதவீத ஆதரவே உள்ளது.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி பல போராட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

    இதனால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி மீது 35 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகாவில் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிக்கு 55 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 42 சதவீத பேரும் ஆதரவு அளித்துள்ளனர். #AndhraCM #JaganMohanReddy
    ×