என் மலர்
உலகம்

இத்தாலியில் பஸ் தீப்பிடித்து 21 பேர் பலி
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.
- காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வெனிஸ்:
இத்தாலி வெனிஸ் நகரின் புறநகர் பகுதியான மெஸ்ட்ரேலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பஸ் கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 21 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வெனிஸ் நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெஸ்ட்ரோ மாவட்டத்தில் உள்ள ரெயில் பாதைகளுக்கு அருகில் பஸ் சாலையை விட்டு விலகி விழுந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Next Story






