தனியார் பஸ்சில் திடீர் தீ

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் போலீசார் விசாரணை
தனியார் பஸ்சில் திடீர் தீ
Published on

ராணிப்பேட்டை:

வேலூரில் இருந்து திருத்தணி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு வாலாஜாவில் எம்.பி.டி சாலையில் சென்றது பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி அருகே வந்த போது பஸ்சின் முன்பு ஹோல்ஸில் கரும்புகை வெளிவந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதை பார்த்த சாலையில் சென்ற பொதுமக்கள் பஸ் டிரைவரிடம் கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து பஸ் டிரைவர் பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தி உடனடியாக பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார்.

பின்னர் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பிடிக்காமல் இருக்க பஸ்சின் முன்பக்கத்தில் தண்ணீரை பாய்ச்சி அடித்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com