என் மலர்
இந்தியா

மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்த பேருந்து- 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்றபோது, பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






