search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுநர்"

    • குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திருடப்பட்டது.
    • பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    கேரளாவின் குன்னங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து அதிகாலை 5 மணிக்கு திருடப்பட்டது. இது தொடர்பாக பேருந்து உரிமையாளர் புகார் கொடுத்தார்.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு குருவாயூரில் திருடுபோன பேருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குருவாயூரில் வசிக்கும் அஜித் என்கிற ஷாம்நாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் 6 மாதங்களுக்கு முன்பு இதே பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    குருவாயூர் செல்ல பேருந்து இல்லாததால், குன்னங்குளம் பேருந்து நிலையத்தில் நின்ற இந்த பேருந்தை மதுபோதையில் குருவாயூருக்கு ஓட்டி வந்ததாக அஜித் தெரிவித்தார்.

    பின்னர் பேருந்தின் உரிமையாளர் தனது முன்னாள் ஊழியரை மன்னித்துவிட்டதால், போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் ஓட்டுநர் அஜித்தை விடுவித்தனர்.

    • கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலி கூறியிருப்பதாவது,

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் குறுவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னன்னன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்வட்டம், எம். வெள்ளாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் கடந்த 16.07.2024 அன்று LPG டேங்கர் லாரியில் ஓட்டுநர்களாக சென்றபோது கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    • காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

    மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரெயில் நிலையம் அருகே லெவல் கிராசிங் கேட் மூடும்போது ரெயில் பாதையில் கார் ஒன்று மாட்டிக் கொண்டது. அப்போது அவ்வழியே வந்த ரெயில் காரின் பின்புறத்தில் மோதியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    ஹஸர்துவாரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததாலும், காரில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும், ஓட்டுநருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

    லெவல் கிராசிங் கேட்டை வேகமாக கடக்க முற்பட்டபோது இந்த ரெயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு காரை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இந்த விபத்திற்கு அடுத்து, லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கிழக்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

    • ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் இருந்து ஹரித்வார் செல்லும் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்து, ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விபத்து ஏற்பட்டதை அறிந்து அப்பகுதியில் வசித்து வருபவர்கள்பேருந்தின் உள்ளே சிக்கியவகர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்த விபத்தில் அங்கிதா என்ற 19 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேருந்துக்குள் சிக்கியிருந்த 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது.
    • விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது. ஓஹியோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிளார்க் பாலத்தை செகென்ட் ஸ்ட்ரீட் பாலம் என்றும் அழைக்கின்றனர்.

    இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி டிரக் ஒன்று எதிரில் வந்த கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்து சம்பவத்தில் மீட்புக்குழு விரைந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெண் ஓட்டுநர் உயிர்தப்பினார்.

    சினிமாவில் வரும் கட்சிகளுக்கு இணையாக இந்த விபத்து மற்றும் மீட்புப் பணி தொடர்பான காட்சிகள் அந்த சமயத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    விபத்தை மிக அருகில் இருந்து அது எப்படி நடக்கிறது என்பதை விறுவிறுப்பான இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதனால் இந்த வீடியோ X தளத்தில் 13 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. டாஸ்காம் என்பது கார், டிரக் உள்ளிட்ட வாகனங்களில் விண்ட் ஸ்க்ரீனில் பொருத்தப்படும் வீடியோ பதிவு செய்யும் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • மார்ச் 31 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
    • 36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

    டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் அதிவேகமாக வந்த மெர்சிடிஸ் எஸ்யூவி கார் உணவகத்தின் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து உணவகத்தின் உள்ளே இருந்த மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக நொய்டாவில் வசிக்கும் பராக் மைனி என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், மெர்சிடிஸ் எஸ்யூவி காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தி வாகனம் ஒட்டினாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை வழங்கி உள்ளார். மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

    * அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும்.

    * ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

    * அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

    * பேருந்து சாலை சந்திப்பு, கூட்ட நெரிசல் பகுதிகளில் மெதுவாக செல்லும்போது இறங்க முயற்சிக்கும் பயணிகளுக்கு நடத்துநர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

    * பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்க தயார்ப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா நடந்தது.
    • திறன் மேம்பாட்டு சாதனைத்தை தளபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கினார்.

    மதுரை

    மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் சார்பாக ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி திறன் மேம்பாட்டு சாதனத்தை திறந்து வைத்தார். இந்த திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் ஓட்டுநர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் அல்போன்ஸ், இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×