search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training Centre"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
    • கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.

    இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

    அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.

    • பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா நடந்தது.
    • திறன் மேம்பாட்டு சாதனைத்தை தளபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கினார்.

    மதுரை

    மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் சார்பாக ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி திறன் மேம்பாட்டு சாதனத்தை திறந்து வைத்தார். இந்த திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் ஓட்டுநர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் அல்போன்ஸ், இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கரூர் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது
    • நிகழ்ச்சியில் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

    கரூர்

    இனாம் கரூர் கிளை நூலகத்தில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி மாவட்ட தலைவர் வடிவேல் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெரால்டு தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் 5 இரும்பு நூல் அடுக்குகள், ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, பீரோ, போட்டித் தேர்வு மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் மேைசகள் மற்றும் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. முடிவில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மோகனசுந்தரம் செய்திருந்தார்.


    ×