பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு

பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா நடந்தது. திறன் மேம்பாட்டு சாதனைத்தை தளபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கினார்.
திறன் மேம்பாட்டு சாதனைத்தை தளபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கிய காட்சி.
திறன் மேம்பாட்டு சாதனைத்தை தளபதி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கிய காட்சி.
Published on

மதுரை

மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் சார்பாக ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி திறன் மேம்பாட்டு சாதனத்தை திறந்து வைத்தார். இந்த திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் ஓட்டுநர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் அல்போன்ஸ், இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com