கரூர் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம்

கரூர் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டதுநிகழ்ச்சியில் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
கரூர் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி மையம்
Published on

கரூர்

இனாம் கரூர் கிளை நூலகத்தில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி மாவட்ட தலைவர் வடிவேல் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜெரால்டு தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் 5 இரும்பு நூல் அடுக்குகள், ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, பீரோ, போட்டித் தேர்வு மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து படிக்கும் வகையில் மேைசகள் மற்றும் ரூ.29ஆயிரத்து 482 மதிப்பில் போட்டி தேர்வு நூல்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. முடிவில் ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மோகனசுந்தரம் செய்திருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com