என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டில் தீவிரமடைந்த பருவமழை: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்
    X

    தமிழ்நாட்டில் தீவிரமடைந்த பருவமழை: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

    • பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    • சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி,

    * தகுந்த வழிகாட்டுதல்களை கடைபிடித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * பணிமனைகளில் நீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.

    * பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    * சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.

    * டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் நீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்பே டீசல் நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×